உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரர் செர்ஹி குலிஷ் டோக்கியோவில் 50 மீற்றர் போட்டியில் இறுதிப் போட்டியின் 30 ஷாட்களுக்குப் பிறகு நான்காவது இடத்தைப் பிடித்தார். 2016 ல் ரியோவில் நடந்த 10 மீற்றர் துப்பாக்கி போட்டியில் குலிஷ் வெள்ளி வென்றார் தரவரிசையில் இரண்டாவ்து இடத்தில் இருக்கிறார். தங்கக் கனவுடன் போட்டியில் கலந்துகொண்வர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப் போடியில் விளையாடிய செர்ஹி குலிஷ் முதல்
நான்கு சுற்றுகளில் அதிக புள்ளைகளைப் பெற்று சக
போட்டியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஐந்தாவது சுற்றில் கலந்துகொண்ட குலிஷ், இலக்கை நோக்கிச் சுட்டார். இன்னொருவரில் இலக்கை குலிஷின் துப்பாக்கி தாக்கியது.
குலிஷும் ஏனையவர்களும் அதிர்ச்சியடைந்தனர். குலிஷ் ஏன் இப்படி தவறு செய்தார் என அனைவரும் வியப்புடன் நோக்கினர்.சில நொடிகள் மெளனமாக நின்ற குலிஷ் தலையை தொங்கப்போட்ட வேறு வெளியேறினார்.
குலிஷ் இலக்கைக் குறிபார்த்தபோது அவரது கொட்ட பட்டன் ஒன்று தளர்ந்தது . அதனால் அசெளகர்யப்பட்ட குலிஷ், சற்று நிலை தடுமாறினார். குறிக்கப்பட்ட விநாடிக்குள் இலக்கை நோகிச் சுட வேன்டும். குனிந்து பட்டனைப் பார்த்த குலுஷ் நிமிர்ந்தபோது தனது குறியை தவிர்த்து இன்னொருவரின் இலக்கைப் பார்த்தார்.அதனால் குறி தவறியது.
No comments:
Post a Comment