Sunday, August 8, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்


  டோக்கியோவில் நடந்த  மகளிர் குதிரை சாகச  போட்டியில்  ஒத்துழைக்க மறுத்த குதிரையுடன் போராடிய  ஜேர்மனியின் விராங்கனை அன்னிகா ஷ்லேயு புள்ளிகள் எதுவும் எடுக்காது வெளியேறினார்.குதிரைக்கு குத்தி கட்டுப்படுத்த முயன்ற பயிற்சியாளர் கிம் ரைஸ்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ரியோ 2016 இல் நான்காவது இடத்தைப் பிடித்த 31 வயதான   அன்னிகா ஷ்லேயு நம்பிக்கையுடன் டோக்கியோவுக்குப் புறப்பட்டார். போட்டி தொடங்குவதற்கு முன்பே குதிரை அவரின் சொல்லைக் கேட்கவில்லை. கலக்கிய  கண்களுடன் அன்னிக்கா ஷ்லேயு அரங்குக்குள் நுழைந்தார். குதிரை நான்கு செட் தடைகளைத் வெற்றிகரமாகத் தாண்டிய ஷ்லேயுவின் குதிரை ஐந்தாவது தடையில் மோதியதால் ஸ்லேயு விழுந்தார்.

அன்னிக்கா ஸ்லேயுவின்  கட்டளைக்குக் கீழ்ப்படியாத குதியை திமிறியது. தடுப்புக்கு வெளியே நின்ற பயிற்சியாளரான கிம் ரஸ்னருக்கு அருகே குதிரை  சென்றபோது  அவர் குஷ்டியால் குதிரையில் பின் பக்கத்தில் குத்தினார்.

பயிற்சியாளரான ரைஸ்னரின்  செயற்பாடு போட்டி விதிகளை முறியதால் அவர்  தகுதி  நீக்கம்  செய்யப்பட்டார்.அரங்கிற்குள் நுழைவதற்கு முன்பும் பின்பும் ஷெலுவின் குதிரை பயமுறுத்தியது போல் தோன்றியது.

இது   விளையாட்டு வீரருக்கு சிறிது பீதியை ஏற்படுத்தியது. அதனால் ஷ்லேயு இந்தக் குதிரையில் ஏறியிருக்கும்போது,   சற்று அழுத்தமாக இருந்திருப்பார். அழுத்தம் அதிகரித்ததால் குதிரை ஒத்துழைக்கவில்லை என ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் உலக சாம்பியனுமான சமந்தா முர்ரே தெரிவித்தார்.

No comments: