.டோக்கியோவில் எதிர் வரும் 24 ஆம் திகதி முதல் ஓகஸ்ட்5 ஆம் திகதி வரை நடைபெற உள்ள பராலிம்பிக் போட்டிக்கான சுடர் கடந்த வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. 2011 இல் நிலநடுக்கம், சுனாமி அகியவற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான இவாட்டில் உள்ள ரிகுசெண்டகடாவில் உள்ள லைட் ஆஃப் ஹோப் நினைவுச்சின்னத்தில் ஒரு சுடர் ஏற்றப்பட்டது.மூளை செயலிழப்புடன் பிறந்த நர்சிங் ஹோம் தொழிலாளியான 21 வயதான மியு தகஹாஷி , அதை ஏற்றி வைத்தார்.
கருத்து "உங்கள் வெளிச்சத்தைப் பகிரவும்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இந்தச் சுடர் ஜப்பானில் தெரிவு செய்யப்பட்ட நகரங்களுக்கிடையில் பயணம் செய்யும். கொரோனா காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இரண்டாம்
உலகப் போரின்போது உடல் ஊனமுற்றவர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்
சர் லுட்விக் குட்மேன் முதன்முதலில் பாராலிம்பிக்ஸை ஆரம்பித்தர்."பாராலிம்பிக்
இயக்கத்தின் பிறப்பிடமாக பக்கிங்ஹாம்ஷயரை மற்றொரு பாரா ஒலிம்பிக் பாரம்பரிய சுடர் விளக்கு
ஏற்றப்பட்டது.
ஒலிம்பிக்20,ஜப்பான், டோக்கியோ, தமிழன்
No comments:
Post a Comment