Thursday, August 5, 2021

எடப்பாடியையும் பன்னீரையும் ஒன்றிணைத்த சசிகலா

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமியும், .பன்னீர்ச்செல்வமும் எதிரும் புதிருமாகச்  செயற்படுகிறார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலின் பின்னர் இருவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு தமது பிரிவினையை வெளிப்படுத்தினர்.கழகத்தினுள் எடப்பாடி கோஷ்டி,பன்னீர் கோஷ்டி என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவர்களைச் சமாதானப்படுத்தும் இன்னொரு குழுவும் அங்கு உள்ளது.

கட்சியை வழிநடத்த வேண்டிய  தலைவர்கள் இருவரும்  ஆளுக்கு ஒரு பக்கமாக செயற்படுவதால் தொண்டர்கள் நிலை தடுமாறுகின்றனர். எடப்பாடியாலும், பன்னீராலும்  ஒரம் கட்டப்பட்ட அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பரம எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகிறார்கள்.

இரட்டைத் தலைமையால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. இரட்டைத் தலைமையை  நீக்கி ஒற்றைத் தலைமைக்கான பாதையை நோக்கி எடப்பாடி முன்னேறிக்கொண்டிருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எடப்பாடி தலைமை வகிப்பதை பன்னீர்ச்செல்வம் விரும்பவில்லை.

எடப்பாடி பழனிச்சாமிக்கும், .பன்னீர்ச்செல்வத்துக்கும் இடையேயான பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சசிகலா, இடையில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்களுடனும், நிர்வாகிகளுடனும் சசிகலா பேசும் ஒலிப்பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படுவதால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவுடன் பேசியவர்கள் அணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உரத்துக் குரல் கொடுத்தார். .பன்னீர்ச்செல்வம்  எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கைப்பற்றும் சசிகலாவின் திட்டத்துக்கு .பன்னீர்ச்செல்வம் ஆதரவு கொடுப்பாரோ என்ற  சந்தேகம் எடப்பாடிக்கு  ஏற்பட்டது. பன்னீர்ச்செல்வம் வழமை போன்று அமைதியாக இருந்தார்.

சசிகலாவின் செயற்பாடுகளால் எடப்பாடிக்கு தலைவலி அதிகமாகியது. சசிகலாவுடன் அடுத்து பேசுவது யார் என்ற பரபரப்பு அதிகமாகியது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்கள் எவரும் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை என்பது எடப்பாடிக்கு ஆறுதலைக் கொடுத்தது.

ஜெயலலிதாவின் மறவுக்குப்  பின்னர் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் தலைமையைக் கைப்பற்றுவற்கு சசிகலா முயற்சி செய்தார். சொத்துக்  குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட  சிறைத்தண்டனை அதற்கு முட்டுக் கட்டையாக இருந்தது. ஜெயலலிதாவின்  விசுவாசியான .பன்னீர்ச்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து  இறக்கி விட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா.

   சிறைவாசம் முடிந்து சசிகலா விடுதலையாகி வெளியே வந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவரைக்  கண்டுகொள்ளவில்லை. சசிகலாவால் வளர்த்து விடப்பட்ட பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரம் மிக்க அமைச்சர்களாக வலம் வந்தனர்.  அவர்கள் அனைவரும் தன்னுடன்  இணைவார்கள் என சசிகலா எதிர் பார்த்தார். அதிகாரத்தில் இருந்தவர்கள் அதிகாரம் இல்லாத தன்னுடன் இணையத் தயாராக இல்லை எனபதை காலம் கடந்த பின்னர் சகிகலா புரிந்துகொண்டார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மிகத் திறமியாக ஆட்சி நடத்துகிறார். குறை சொல்வதர்கு எதுவும் இல்லை.  தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்டாலினை  விமர்சித்தவர்கள் அவரின் ஆட்சியைப்  புகழ்கிறார்கள். எடப்பாடியார் தமிழக அரசையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிக்கிறார். பன்னீர்ச் செல்வமோ வழமை போன்று அமைதியாக இருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்து வருட ஆட்சியின் போது நடை பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களின் பட்டியலை தமிழக அரசு கையில் எடுதுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.தமிழகத்தின் முன்னாள்  போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின்  வீட்டிலும், அலுவலகங்களிலும், அவரது உறவினர், நண்பர்கள்  ஆகியோரின் வீடுகளிலும்  வருமான வரிச் சோதனை நடைபெற்றது. இதனால், அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்காக எடப்பாடிபழனிச்சாமியும், .பன்னீர்ச்செல்வமும் திடீரென டில்லிக்குச் சென்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தனர். தமிழக மக்களின் நலனுக்காகவே மோடியையும் அமித் ஷாவைவும் சந்தித்ததாக இருவரும் தெரிவித்தனர்.எதைப் பற்றிப் பேசினீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை. பிரதமர் மோடியை இருவ்ரும் இன்ராகவும் தனித்தனியாகவும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக மக்களின் நலனுக்கான சந்திப்பு என்றாரால் தனித்தனியான சந்திப்பு எதறகு என்ற  கேள்வி எழுவது நியாயம்தான். அதர்கும் அவர்களிடம் இருந்து தில் இல்லை.

தமிழக அரசின் பழி வாங்கல், சசிகலாவின் நெருக்குதல் என்பனபற்றியே இருவரும் டில்லியில் பேசி இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இஞ்ச ஒழிப்பு துறையினர் எடுக்கும் நடவடிக்கையில்  மத்திய அரசு அலவுக்கு மீறி அதிகாரம் செலுத்த முடியாது. சசிகலாவுடன் இணைந்து அரசியல் செய்யுமாறு  அமித் ஷா வேண்டுகோள் விடுத்தபோது எடப்பாடி அதனை தட்டிக் கழித்து விட்டார். ண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போல் மத்திய அரசிடம் தஞ்சமடைந்துள்ளார்.

டில்லி விஜயத்தின் பினர் .பன்னீர்ச்செல்வத்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு எதிராக வாயைத் திறக்காத .பன்னீர்ச்செல்வம், ஆவேசமாகப்  பேசியுள்ளார்.  'தனிப்பட்ட நபரோ, குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை, நான்கரை ஆண்டுகளாக  கழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம். 'எந்த நோக்கத்துக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்., துவங்கப்பட்டதோ, அது இப்போது நிரூபித்து காட்டப்பட்டு வருகிறது. அதனால், யாராலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற முடியாது' என, கூறியுள்ளார்.

சசிகலா உள்ளே வந்தால் அவரது மன்னார்குடி உறவுகளும் உள்ளே வந்து விடும் என எடப்பாடி அச்சப்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா இருந்தார் எனபது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், சசிக்லாவின் குடும்ப உறவினர்கள் ஜெயலலிதாவின் போயஸ் காடன் இல்லத்தில் செய்த அட்டகாசங்கள் வெளியில் வராத இரகசியமாக  உள்ளன. இப்போது நாம் சுதந்திரமாக இருக்கிறோம். சசிகலாவை இணைத்தால்  எங்களுடைஒய சுதந்திரம் இல்லாமல் போய்விடும் என்பது எடப்பாடியின் வாதம்.

எடப்பாடியின் கருத்தில்  உண்மை இருக்கிறது.சசிகலா உள்ளே வந்தால் தினகரன் முன்னிலைப்படுத்தப்படுவார். எடப்பாடியும் பன்னீரும் ஓரம் கட்டப்படுவார்கள். ஜெயலலிதாவுக்கு  கீழ்ப்படிந்ததைப்  போன்று சசிகலாவின் உறவினர்களுக்குக் கட்டுபப்ட  வேண்டிய  நிலை ஏற்படும்.ஒட்டு மொத்தத்தில் மன்னார் குடி குடும்பத்திடம் கையேந்தும் நிலை  ஏற்படும். இதனை .பன்னீர்ச்செல்வம் தாமதமாகப் புரிந்துகொண்டார்.

அரசியலில் வெற்றி தோல்வி சகஜமானது. ஜெயலலிதா தோல்வியடைந்த சரித்திரமும் இருக்கிறது. கட்சியை ஒழுங்காக வழிநடத்தினால் தேர்தலில் வெற்றி பெறும் சந்தர்ப்பம் ஏற்படும். ஆட்சி செய்யும் கட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டால் கல நிலைவரம் மாற்ற மடையும். கட்சி கட்டுக் கோப்பாக இருந்தால்  தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவானது.

எடப்பாடியும் பன்னீரும் ஒன்றாகிவிட்டார்கள். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையில்தான் கழகத்தின் எதிர்காலம் தங்கி உள்ளது.

தமிழகம்,அரசியல்,சசிகலா,எடப்பாடி, பன்னீர்செல்வம் ,ஸ்டாலின்,தமிழன்

 

No comments: