Tuesday, August 17, 2021

அறக்கட்டளைக்கு லோட்ஸ் மைதானத்தில் மரியாதை

இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே  லோட்ஸ் மைதானத்தில் நடந்த  இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வீரர்களும், மத்தியஸ்தர்களும், வர்ணனையாளர்களும் சிவப்புத் தொப்பியுடன் காட்சியளித்தனர்.

 வழமைக்கு மாறான  சிவப்புத் தொப்பிக்கான காரணம் என்ன என   ரசிகர்கள் இணையத்தில் கேட்டனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூவ்  ஸ்ட்ராஸின் மனைவி ருத் ஸ்ட்ராஸ் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு  பல்வேறு கட்ட சிகிச்சைகள்   வழங்கப்பட்ட போதும், கடந்த 2018ம் ஆண்டு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்இதனையடுத்து கான்சரால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிப்புரியும் வகையில் ரூத் ஸ்ட்ராஸ் கான்சர் ஃபௌண்டேஷனை உருவாக்கி நடத்தி வருகிறார்.

  ரூத் ஸ்ட்ராஸின் கான்சர் அறக்கட்டளைக்கு மரியாதை கொடுக்கும் வகையிலும் நிதி திரட்டும் வகையிலும் இங்கிலாந்து வீரர்கள் சிவப்பு நிற தொப்பி அணிந்து விளையாட முடிவெடுத்தனர். அவர்களின் முடிவுக்கு மதிப்புக்கொடுத்த இந்திய வீரர்களும் சிவப்புத்தொப்பி அணிந்தனர்.

அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக் க்ராத்தின் மனைவி ஜேனும் மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். இதன் பின்னர் மெக் க்ராத்தும் அறக்கட்டளை உருவாக்கி நடத்தி வருகிறார்

No comments: