Friday, August 27, 2021

உலகில் புதிய அகதிகள் உருவாக்கம்

 
ஆப்கானிஸ்தான்  மக்களை தலிபான்களின்  பிடியில்ல் இருந்து  விடுவித்த  அமெரிக்காவும்  அதனது  நேச  நாடுகளூம் இருபது  வருடங்களின்  பின்னர் அவர்கள் அகதிகளாவார்கள் என  கனவிலும்  நினைத்திருக்க  மாட்டார்கள். அந்த  அகதிகளையும்  அழைத்துக்கொண்டு  தாமும்  வெளியேறப்போவதை  அவர்கள்  எதிர்பார்த்திருக்க  மாட்டார்கள்.

அப்ப்கான்  மக்களுக்கு  உதவி செய்ய   புறப்பட்ட உலகின்  வல்லரசுகளை  உள்ளடக்கிய  படை அங்கிருந்து  வெளியேற  வேண்டிய  துன்பியல் நிகழ்வு  நடந்துள்ளது. ஆப்கானில் இருந்து  முப்பது  நிமிடங்களுக்கு ஒரு  விமானம்  புறபப்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. எமக்கொரு  நாடு  இருக்கிறதென  நெஞ்சை நிமிர்த்தி  வாழ்ந்த  ஆப்கான்  மக்கள் அகதிகளாக  வெளியேற  வேண்டிய  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காபூல் விமான் நிலையத்தில்  இருந்து கடந்த  21  ஆம் திகதி  அதிக பட்சமாக 21,600 பேர் வெளியேற்றப்பட்டதாக  அமெரிக்கா தெரிவித்துள்ளது.37  அமெரிக்க  விமானங்களின்  மூலம்  12,700 பேரும், நட்பு நாட்டு விமானங்களின்  மூலம் 8,900  பேரும்  24  மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர்.


ஓகஸ்ட் 14 அன்று ஆப்கானிஸ்தான் தலைநகரை லிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, வரலாற்றில் மிகப்பெரிய அமெரிக்க விமானப் போக்குவரத்து வெளியேற்றத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து 70,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சமீபத்திய நாட்களில் வேகம் அதிகரித்தாலும், மக்கள் தப்பிக்க முற்படுவதால் அது இன்னும் குழப்பமான போராட்டமாக  மாறியுள்ளது. ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தை அடைய முயலும் மக்கள் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். அதை விட வெளியேற விரும்புவோர் தொகை அதிகம்.  ள் அமெரிக்காவில் அல்லது வேறு எங்காவது மீள்குடியேற்றத்தின் பல சவால்களை  அவர்கள் எதிர்கொள்வார்கள் என  ஏபி  செய்தி தெரிவித்துள்ளது.

  வெளியேற்றப்பட்ட 70,000 பேரில்4,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான சிறப்பு புலம்பெயர்ந்த விஸா பெற்றஆப்கானியர்கள் அடங்குவர்,  அமெரிக்காவுக்கும்   நேட்டோ படைகளுக்கும்  மொழி பெயர்ப்பாளர்களாக,  அல்லது வேறு வகையில்  பனியாற்ரியவர்கலும் ஆப்கானை  விட்டு  வெளியேற முடிவு  செய்துள்ளனர்.அவர்கள் குடும்பதுடன்  உடனடி  விஸாவுக்கு  விண்ணப்பித்துள்ளனர்.  அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரும்அடங்குவர்.

அமெரிக்க குடிமக்களும்,ஏற்கனவே சட்டப்பூர்வ அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களும், சிறப்பு குடியேற்ற விஸாவுக்கு ஒப்புதல் பெற்றவர்கள்  பொதுவாக கட்டார் அல்லது மற்றொரு வளைகுடா நாட்டில் நிறுத்தப்பட்ட  தங்கவைக்கப்படுவார்கள்.பிறகு அமெரிக்கா செல்லலாம். ஆப்கானிஸ்தானில் இருந்து  அகதிகளாக வெளியேறுபவர்கள்  மீள் குடியேற்றம் செய்யப்படும் வரை தற்காலிகமாக  உகாண்டா, ருவாண்டா, கோஸ்டாரிகா, அல்பேனியா உட்பட  13 நாடுகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

உள் நாட்டுப்போர் இனப்பிரச்சினை,கலவரம் ஆகியனவற்றின்  போது  அகதிகளை அழைத்துச் சென்ற வரலாறு உள்ளது.   

  வியட்நாம் போரின் முடிவில் 1975 இல் சைகோனின் வீழ்ச்சியுடன் சுமார் 7,000 பேரை அமெரிக்கா விமானத்தில் ஏற்றியது, இறுதியில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 100,000 க்கும் அதிகமான அகதிகளை அழைத்துச் சென்றது. 1996 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுசேனின்   கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பிறகு, வடக்கு ஈராக்கில் இருந்து சுமார் 5,000 குர்துகள் மற்றும் பிற ஈராக் சிறுபான்மையினரை அமெரிக்கா வெளியேற்றியது.


1999 ஆம் ஆண்டில், கொசோவோ மாகாணத்தில் அல்பேனியர்களுக்கு எதிரான யூகோஸ்லாவியன் "இனச் சுத்திகரிப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 பேர் அமெரிக்காவிற்கு அகதிகளாக அழைத்து செல்லப்பட்டனர்

சர்வதேச மீட்புக் குழு மற்றும் கத்தோலிக்க ஆயர்களின் அமெரிக்க மாநாடு உட்பட ஒன்பது இலாப நோக்கமற்ற மீள்குடியேற்ற முகமைகள் அகதிகளுக்கு உதவ வேலை செய்யும் இணைப்பின் வலையமைப்பை மேற்பார்வையிடுகின்றன. அவர்கள் புதிய நகரங்களில் வைக்கப்பட்டவுட பின் 90 நாட்களுக்கு உணவு மற்றும் வீட்டுவசதி உதவியைப் பெறுகிறார்கள், ஆனால் தன்னிறைவு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.

அமெரிகா, பிரிட்டன், ஜேர்மனி  ஆகிய நாடுகள் ஆப்கான்  மக்களை  அழைத்து  செல்வதில்  முனைப்புக் காட்டுகின்றன.  விமான நிலையதில் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ள. விஸா  இல்லாதவர்கள் உள்ளே  செல்ல முடியாது. விமான நிலையத்தை  முற்றுகையிட்டுள்ள தலிபான்கள் அடிக்கடி  துப்பாக்கிப்  பிரயோகம்செய்கிறார்கள். விசாரணைக்கென  சிலரை  கூட்டிச்  செல்கிறார்கள்.

 கால் நடையாக எல்லையைத்தாண்ட  பல ஆப்கானிஸ்தான்கள்  முயற்சி செய்கிறார்கள். அதிகமானோர்  பாகிஸ்தானின் எல்லையில் குழுமியுள்ளனர்.  எத்தனை இலட்சம் அகதிகள்  அப்கானிஸ்தானில்  இருந்து  வெளியேறினார்கள் என்ற  விபரம்  உடனடியாகத் தெரியவில்லை

No comments: