நாமும் பல படங்களைப் பார்த்து வியந்திருப்போம் அந்தப் படத்தைப் எடுத்தது யார் என்பது தெரியாது. நாம் பார்த்து ரசித்த பல படங்களின் சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த சுகுமார் என்பது நமக்குத் தெரியாது. சச்சின் டெண்டுகல்கரின் சுயசரிதையான "பிளேயிங் இஸ் மை வே" எனும் புத்தகத்தின் அட்டைப் படத்தை அலங்கரிப்பது சுகுமாரின் புகைப்படம்.
புகைப்படக்
கலைஞரான சுகுமார் சேஷாத்திரி
தனது 35 வருடகால
அனுபவத்தில் நான்கு ஒலிம்பிக், இரண்டு
உலகக்கிண்ண உதைபந்தாட்டம், இரண்டு ஆசிய
விளையாட்டுகள்,டென்னிஸ் போட்டிகள் உலகக்கிண்ண ஒரு
நாள் கிறிக்கெற், உலகக்கிண்ண ரி20, ஐபிஎல் போன்ற விளையாட்டு நிகழ்வுகளை
புகைப்படம் எடுக்க உலகம் முழுவதும்
பயணம் செய்துள்ளார்.வெற்றி பெற்றவரின் முகத்தில் ஏற்படும் பூரிப்பும் தோல்வியடைந்தவரின் முகத்தில்
உண்டாகும் ஏமாற்றமும்
சுகுமாரின் கமரா வழியே
நம் மனதில் பதிந்துள்ளன.
தஞ்சாவூரில் பிறந்த சுகுமார்,சிறு வயதிலேயே பெற்ரோருடன் சென்னையி குடியேறினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை புகைப்படம் எடுக்க இந்தியாவில் இருந்து அனுமதிக்கப்பட்ட மூன்று புகைப்படப் பிடிப்பாளர்கலில் சுகுமாரும் ஒருவர். தனது டோக்கியோ அனுபவம் பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
:ஜப்பான்
தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் அனுபவம்
வித்தியாசமானது. அரங்கு கொள்ளாத பார்வையாளர்களின்
கரகோஷத்துடன் நடைபெறும் போட்டிகளையே பார்த்து படமெடுத்து பழகிய நான் முதல்
முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் படமெடுத்தேன்.
விளையாட்டு
வீரர்களின் அக் ஷன் படங்களுடன்
அவர்களது முகபாவங்களை படமெடுப்பது என்பதும் எனக்கு மிகவும் பிடித்த
விஷயம். குத்துச் சண்டை போட்டியில் முன்பெல்லாம்
வெற்றி பெற்றவர்களின் கைகளை பிடித்து நடுவர்
தூக்கி காண்பித்து வெற்றி பெற்றதை அறிவிப்பார்.
கொரோனா காரணமாக இப்போது நடுவர்கள்
யார் கையையும் தொடுவதில்லை கட்டைவிரலை மட்டும் காண்பிப்பார்.
ஆனால், அது தெரியாமல் இந்திய வீராங்கனை மேரிகோம் தான் வெற்றி பெற்றதாக சந்தோஷத்தில் குதித்து பின் தோல்வி என்பதை அறிந்து துவண்டு போனார். பளுதுாக்கும் வீராங்கனை மீராபாய் குறிப்பிட்ட பளுவை துாக்கியதுமே தனக்கு பதக்கம் உறுதி என்பதை உணர்ந்து கம்பீரமாக பளுவை துாக்கி போடுவார்.
சிந்து
வெற்றி பெற்ற அடுத்த கணமே
புகைப்படக்கலைஞர்களை பார்த்து தனது சந்தோஷத்தை பதிவு
செய்வார். இப்படி நமது வீரர்களை
வித்தியாசமாக படமெடுத்தேன். வில்வித்தை வீராங்கனை தீபிகாவிடம் இருந்து அம்பு பறப்பதை
ஒரு சலஞ்சாக எடுத்து
பதிவு செய்தேன்.
நீரஜ்
சோப்ரா முதல் வாய்ப்பில் ஈட்டி
எறிதலைப் பார்த்ததுமே அவருக்கு பதக்கம் உறுதி என்பதை
தெரிந்து கொண்டு நிறைய படங்கள்
எடுத்தேன். அவரும் தங்கம் வென்று
நாட்டை பெருமைப்படுத்தினார். அவர் தங்கியிருந்த இடத்திற்கு
மறுநாள் சென்று அவர் சம்பந்தப்பட்ட
படங்களை காண்பித்த போது அவருக்கு அவ்வளவு
சந்தோஷம். என்னிடம் இருந்த கமராவை
வாங்கி அவரும் சில கோணங்கள்
பார்த்து மகிழ்ந்தார்.
நீரஜ்
சோப்ரா சம்பந்தப்பட்ட எனது படங்கள் சமூக
வலைதளங்களில் பகிரப்பட்டு இதுவரை பதினைந்து லட்சம்
பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும்
கூடும். கிரிக்கெட் வீரர் கோஹ்லி பகிர்ந்து
கொண்ட படத்தை ஐந்து லட்சம்
பேர் பார்த்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.
ஆனால் இப்போது மூன்று மடங்கு
அதிகமாகியுள்ளது.
பல ஆயிரக்கணக்கான படங்கள் எடுத்திருந்தாலும் அதில் தேர்ந்து எடுத்த படங்களைத்தான் இங்குள்ள ஏஜன்சி பயன்படுத்திக் கொண்டது. மக்கள் பார்க்காத பார்க்க வேண்டிய படங்கள் நிறைய இருக்கிறது அவைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருக்கிறேன் இந்த வேலை முடிந்ததும் நல்ல அனுசரணையாளர் கிடைத்தால் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்"
பிகாம்
பட்டபட்டதாரியான சுகுமாருக்குஇப்போ 66 வயது. வங்கியில் காசாளராக கடமையாற்ரிய
சுகுமார் தட்டச்சு,
புத்தக பராமரிப்பு, புகைப்படம் எடுத்தல் போன்ற
பல புதிய திறன்களைக் கற்றுக்கொண்டார்.
சுகுமாரின் புகைப்படக்
கலையைப் பார்த்து வியந்த வங்கி
1979 ஆம் ஆன்டு அவரை அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக ஆக்கியது.
1984 இல், அவர் ஒரு ஃப்ரீலான்ஸ்
விளையாட்டு புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கினார் 2001 இல்
ஓய்வு பெற்ற பிறகு, அவர்
சர்வதேச பணிகளில்
அதிக் ஈடுபாடு காட்டினார்.
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின் போது, ஜப்பானிய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனையான சவோரி யோஷிடாவை அமெரிக்காவின் ஹெலன் மரோலிஸ் தோற்கடித்து வரலாறு படைத்தார். இது அமெரிக்காவிற்கு ஒரு வரலாற்று தருணம் ஆனால் ஜப்பானுக்கு, குறிப்பாக யோஷிடாவுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு. 13 முறை உலக சம்பியன். 4 ஏசியன் கேம்ஸ், 4 ஏசியன் சம்பியன் அகியவற்றில் தங்கம் வென்றவர். இரண்டு ஒலிம்பிக் தங்கங்களும் ஒரு ஒலிம்பிக் சில்வரும் வென்றவர் யோஷிடா சுகுமாரின் புகைப்படம் அவள் முகத்தில் இழப்பின் மூல உணர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த புகைப்படம் பின்னர் அவருக்கு அமெரிக்காவின் போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தது.
விளையாட்டு மீதான அவரது ஆர்வம் அவரை எல்லா எல்லைகளையும் தாண்டி சிறப்பாகச் செய்யத் தூண்டியது. உசைன் போல்ட்டின் ஒற்றை காட்சியைப் பிடிக்க 4 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே நிலையில் காத்திருந்து, மிகப்பெரிய தேசிய , சர்வதேச விளையாட்டு பிரபலங்களைக் கிளிக் செய்வது வரை, அவர் அனைத்தையும் செய்துள்ளார். ஒத்திசைக்கப்பட்ட நீச்சல் விளையாட்டாக ஒரு புகைப்படப் புத்தகத்தை வெளியிட சுகுமார் விரும்புகிறார்.
No comments:
Post a Comment