ஒலிம்பிக்
மகளிர் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் சுவீடனை
எதிர்த்து விளையாடிய கனடா பெனால்ரியில் வெற்றி
பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது.
லண்டன், ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கனடா, வெண்கலப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய பின்னர் கனடாவின் பயிற்சியாளரான பெவ் பிரீஸ்ட்மேன் இந்த ஒலிம்பிக்கின் இலக்கு பதக்கத்தின் நிறத்தை மாற்றுவதாகக் கூறினார். 2016 ல் ரியோவில் ஜேர்மனியிடம் 2-1 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது சுவீடன்.
34 வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை ஸ்டீனா பிளாக்ஸ்டீனியஸ் கோல் அடித்தார். கனடாவுக்கு கிடைத்த பெனால்ரி மூலம் ஜெஸ்ஸி ஃப்ளெமிங் 67 வது நேரத்தில் கோல் அடித்து சமப்படுத்தினார். தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி மேலும் 30 நிமிடங்கள் நடந்தது. இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்ரி வரை போட்டி என்றது.
ஐந்து
பெனால்ரிகளிலில் இரண்டு அணிகளும் தலா
இரண்டு கோல்கள் அடித்தன.கனடாவின்
கோல்கீப்பர் ஸ்டீபனி லப்பே, இரண்டு
பெனாரிகளைத் தடுத்து தங்கத்தை தங்கத்தை நோக்கி அணியை அழைத்துச்
சென்றார். டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் 20 வயது வீராங்கனை ஜூலியா
கிராஸோ கடைசி கோலை அடித்து
கனடாவின் தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார்.
கனேடிய அணியின் 38 வயதான கப்டன் கிறிஸ்டின் சின்க்ளேர், தங்கக் கனவை நிஜமாக்கினார்.
No comments:
Post a Comment