Wednesday, August 18, 2021

உதைபந்தாட்ட நிர்வாகிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

யாழ்ப்பாண‌த்துக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா உதைபந்தாட்ட சம்மேளனத்தின்  புதிய  நிர்வாகிகளை அங்குள்ள உதைபந்தாட்ட லீக்குகள் வரவேற்பளித்து கெளரவித்தன.

   நடப்பு வருட தலைவர் ஜஸ்வர் உமர், பொது செயலாளர்  .உபாலி ஹேவகே, உப தலைவர்   இ.ஆர்னோல்ட், பிரதி பொது செயலாளர் நிர்வாகம்  தி.வரதராசன், பொருளாளர்  .செல்லர், உப பொருளாளர்  அ.நாகராஜன் ஆகியோரை  வரவேற்று கெளரவிக்கும் வைபவங்கள் வவுனியா, முல்லைத்தீவு, பூநகரி, யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.

உதைபந்தாட்ட லீக்குகளின் கழக நிர்வாகிகள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகள், மாகாண உடற்கல்வி பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள்,  மீள் குடியேற்றத்தை ஏற்படுத்தி வரும் பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ,வலிகாமம் மேற்கு  பிரதேசசபை தவிசாளர் க.நடனேந்திரன்,    யாழ் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர், ஊடகவியலாளர்கள்  ஆகியோரைச் சந்தித்த புதிய நிர்வாகிகள் எதிர்கால கிராமத்தை நோக்கிய உதைபந்தாட்டம் தொடர்பில் கலந்துரையாடினார்

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும்   மைதான புன‌ரமைப்பு கட்டுமான வேலைகள், பயிற்சிகள், சுற்றுப்போட்டிகள், மத்தியஸ்தர் அபிவிருத்தி, லீக்குகளின் நிதிப் பங்களிப்பு, வளப்பங்கீடு போன்றன வெகு விரைவில் சம காலத்தில் ஆரம்பிக்கப்படும் என தலைவர் ஜஸ்வர் உமர், தெரிவித்தார்.

  வடபகுதியின் அதிகப்படியான வாக்குகளே த‌ன்னை வெற்றி பெற செய்ததாக‌த் தெரிவித்த ஜஸ்வர் உமர்,  வரவேற்பு வழங்கிய லீக்குகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

No comments: