2020 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட ஒலிம்பிக் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இந்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பனில் ஒலிம்பிக் நடைபெறக் கூடாது என அங்குள்ள மக்களில் சிலர் எதிர்ப்புக் காட்டினர். உலகின் பல நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வருபவர்களால் கொரோரா தொற்று ஏற்படும் என எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர். அவர்கள் எதிர் பார்த்தது போன்று கொரோனா தொற்று ஒலிம்பிக் போட்டியாளர்களால் உருவாகவில்லை.
ஒலிம்பிக்
கிராமத்தில் கொரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டனர்.
பதக்கக் கனவுடன் போட்டியிட காத்திருந்த
அவர்கள் பங்குபற்றாமல் நாடு திரும்பினர். கொரோனாவால்
பாதிக்கப்பட்டு குணமடைந்த வீரர் தங்கம் வென்று நம்பிக்கையளித்தார். விபத்து
காரணமாக பதக்க வாய்ப்பை நழுவ
விட்டவர்களும் சோகத்துடன் நாடு திரும்பினர். வெப்பத்தால்
வாடியவர்கள் போட்டியை இடை நடுவில் கைவிட்டனர்.
டோக்கியோ
ஒலிம்பிக்கில் கடைசி நாள் வரை சீனா
முதலிடம் பெற்று அமெரிக்காவை அச்சுறுத்தியது.
சீனாவை விட அதிக பதக்கங்களை
அமெரிக்கா பெற்றிருந்தாலும்,
தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை சீனாவை
குறைவாக இருந்ததால் இரண்டாவது
இடத்தில் இருந்தது.கடைசி நாளில் மூன்று
தங்கப் பதகங்களைப் பெற்ற அமெரிக்கா பதக்கப்
பட்டியலில் முதலிடம் பெற்றது.
, 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் உட்பட 113 பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா (38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம்) 2வது இடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் (27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம்) 3வது இடத்தையும் பிடித்தன.
டோக்கியோ
ஒலிம்பிக்கில் 93 நாடுகள் பதக்கங்கலைப் பெற்றுள்ளன.
ஒரு வெண்கலப் பதக்கம் பெற்ற சிரியா
93 ஆவது இடத்தில்
உள்ளது. தங்கம், வெள்ளி, வெண்கலம்
ஆகிய மூன்றையும் 37 நாடுகள் பெற்ருள்ளன.69,
நாடுகள் வெள்ளிப் பதக்கங்களையும், 66 நாடுகள் வெண்கலப் பதக்கங்களையும்
பெற்றுள்ளன.
ஒலிம்பிக்
கிராமத்தில் தங்கி இருந்தவர்கள் வெளியேறத்
தொடங்கி விட்டனர். ஜப்பானின் முகிய விமான நிலையங்களில்
ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்றவர்களின்
சத்தம் எதிரொலிக்கிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) தலைவர் தோமஸ் பாக் முன்னிலையில், ஐ.ஓ.சி., கொடி இறக்கப்பட்டது. அதனை, டோக்கியோ நகர கவர்னர், ஐ.ஓ.சி., தலைவர் தோமஸ் பக்கிடம் வழங்கினார். 2024ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ள பாரிஸ் நகர மேயரிடம் தோமஸ் பக் முறைப்படி வழங்கினார். அப்போது பிரான்ஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரிஸ் நகரின் உலக அதிசயமான ஈபிள் டவர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இடம் பெற்ற வீடியோ தொகுப்பு காண்பிக்கப்பட்டது.
இதே
நேரம் ஈபிள் டவரில் கூடிய மக்கள்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிரான்சின்
விமானங்கள் அணிவகுத்து ஒலிம்பிக் நிறங்களை வெளியிட்டன.
முன்னதாக பிரான்ஸில் 1924 ஆம் ஆண்டு ஒலிம்பிக் பரிஸ் ,1968 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கிரெனோபிள் ,1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் ஆல்பர்ட்வில்லே ஆகியன நடைபெற்றன. நான்காவது புறையாக பிரான்ஸில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment