ஒலிம்பிக்
பெண்கள் குத்துச் சண்டை 69 கிலோ
பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் வெண்கல பதக்கத்தைப் பெற்றார். நேற்று
நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில்
உலக சம்பியனும் தர வரிசையில் முதலாம்
இடத்தை வகிப்பவருமான துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியுடன் லோவ்லினா
மோதினார்.
போட்டி ஆரம்பம் முதலே புஸேனஸின் கை ஓங்கி இருந்தது. லோவ்லினா சலைக்காமல் போராடினார். இறுதியில் 5:0 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்த லோவ்லினாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
துருக்கி
வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலி தொடக்கத்திலேயே
போட்டியை தனது கட்டுக்குள்
கொண்டு வந்தார். முதல் சுற்றை மிக
எளிதாக சுர்மனேலி கைப்பற்றினார். லோவ்லினாவிற்கு எதிரான முதல் சுற்றை
50:45 புள்ளி கணக்கில் சுர்மனேலி கைப்பற்றினார். இதில் அனைத்து நடுவர்களிடமும்
சுர்மனேலி தலா 10 புள்ளிகளை பெற்றார்.
இதையடுத்து 2வது சுற்றையும் மிக
எளிதாக சுர்மனேலி கைப்பற்றினார். லோவ்லினாவிற்கு எதிரான இந்த சுற்றை
50:45 புள்ளி கணக்கில் சுர்மனேலி வென்றார். இதிலும் அனைத்து நடுவர்கலிடமும்
இருந்து சுர்மனேலி தலா 10 புள்ளிகளை பெற்றார்.
லோவ்லினா அனைத்து நடுவர்களிடமும் இருந்து
தலா 9 புள்ளிகளை மட்டுமே பெற்றார்.
2வது சுற்றிலேயே சுர்மனேலியின் வெற்றி உறுதியாகிவிட்டது. பின்னர் மூன்றாவது சுற்றிலும் லோவ்லினாவிற்கு எதிரான முதல் சுற்றை 50:45 புள்ளி கணக்கில் சுர்மனேலி கைப்பற்றினார். இதிலும் சுர்மனேலி தலா 10 புள்ளிகளை பெற்றார். இதனால் மொத்தமாக துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியை 5:0 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
லோவ்லினா
போர்கோஹைன், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர் 2018, 2019 உலக பெண்கள் குத்துச்சண்டிஅப்
போட்டிகளில் வெண்கல
பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக
ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார். டோக்கியோ
ஒலிபிக்கில் இந்தியா பெறும் மூன்றாவது பதக்கமாகும். மீராபாய் சானுகோ, பி.வி
சிந்து ஆகிய இருவரும் வெண்கலம் வென்றுள்ளனர்.
இதே
வேளை குத்துச் சண்டையில் இந்தியா பெறும் மூன்றாவது
பதகம் இதுவாகும். முன்னதாக பீஜிங்
2008 ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங், இலன்டன்
2012 ஒலிம்பிக்கில் மேரி
கோம் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
No comments:
Post a Comment