Sunday, August 29, 2021

தூசு தட்டப்படும் வழக்குகளால் கலங்கிப்போன அரசியல் தலைவர்கள்

 பெங்களூர்    சிறையில்  சசிகலா சலுகைகள்  பெற்ற   விவகாரத்தை ஆட்சியில் இருக்கும்  பாரதீய  ஜனதாக் கட்சி துரிதபடுத்தியுள்ளது. கொடநாடு  கொள்ளை  தொடர்  மரணம் தொடர்பான  வழக்கில்   மேல்  விசாரணை  ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. கடந்த  13  ஆம் திகது  டெல்லி சிறையில் உள்ள சுகாஷ் சந்திரா என்பவரின்  வீட்டில்  வருமான வரித்துறை யினர்  நடத்திய  அதிரடிச்  சோதனையில்  20 சொகுசுக் கார்கள், 8 கோடிரூபா, தங்கம் , மடிக்கணனி போன்ற‌வை  கைபற்றப்பட்டன.

அண்ணா திராவிட  முன்னேற்ற ஆட்சியின் போது  கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு இடிந்து  விழும்  நிலையில்  இருப்பதால் அது  பற்றிய  விசாரணை  ஆரம்பமாகியுள்ளது.கணக்கில் வரவு  வைக்கப்பட்டுள்ள  28  தொன்  நிலக்கரியை  காணவில்லை என  அமைச்சர் செந்தில்  பாலாஜி  தெரிவித்துள்ளார்.

கொடநாடு  வழக்கால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம்  பதறுகிறார்.ஜெயலலிதாவின் உடன்  பிறவா சகோதரியான சசிகலாவும் கொடநாடு  வழக்கில்  சாட்சி  சொல்ல  வேண்டிய  நிலை  உள்ளது. சசிகலாவைக்  குறிவைத்தே பெங்களூர்  சிறை விவகாரம் துரிதப்படுத்தப்படுவதாக சந்தேகம்  ஏற்பட்டுள்ளது.

கணக்கில் வரவு  வைக்கப்பட்டுள்ள  28  தொன்  நிலக்கரியை  காணவில்லை என  அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளார்.பால் வள‌துறையில் ஊழல், உள்ளூராட்சி சபையில் முறை கேடு   என  இன்றைய  அமைச்சர்கள் குற்றம்  சாட்டுகின்றனர்.  அத ற்கு  முன்னாள் அமைச்சர்கள் பதிலளிக்கி றார்கள். அத ற்கான சந்தர்ப்பத்தை   இன்றைய  அரசு   கொடுக்கிறது.

அண்ணா திராவிட  முன்னேற்றக் கழக அரசாங்கத்தின்  ஆட்சியில் கட்டப்பட்ட  அரச  குடியிருப்பு  த்ரம்  குறைந்தா பொருட்களினால்  கட்டபடதாக  புகார் எழும்பியதால்   இரண்டு  அதிகாரிகள்  இடை நிறுத்தம்  செய்யப்பட்டுள்ளனர். இதற்கு  அன்றைய  முன்னாள்  துணை  முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம்  மீது  கைகாட்டப்படுகிறது.   அவருக்கு வேன்டியவர்கள்தான்  அக் கட்டட  ஒப்பந்ததாரர்  என  விளக்கமளிக்கப்ப்பட்டுள்ளது.

எடப்பாடி, சசிகலா, ஓ.பன்னீர்ச்செல்வம், வேலுமணி, எம்.ஆர். வியஜபாஸ்கர்  ஆகியோரை  ஸ்டாலினின்  அரசாங்கம்  பழிவாங்குவதாக குற்றச்சாட்டு   எழுந்துளது.மோசடிப்  பேர்வழி  சுகாஷின்  சென்னையில்  உள்ள வீட்டில்   வருமனாவரித் துறையின  சோதனையிட்டதை  தினகரனுக்கு எதிரான காய் நகர்த்தல் என்கிறார்கள்.

சசிகலாவுக்கு  எதிராக  ஓபிஎஸ்  தர்மயுத்தம்  தொடங்கியதால் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தில் இருந்து  அவர்  வெளியேற்றப்பட்டார்.கழகத்தின் இரட்டை இலைக்கு  சசிகலாவும்  உரிமை  கோரியதால்  இரட்டை இலைச்  சின்னம்  முடக்கப்படது.இரட்டை இலைச்  சின்னத்தைப்  பெரா  தேர்தல்  ஆனையத்துக்கு  இலஞ்சம்  கொடுக்க  முற்பட்டவர்தான் டெல்லி  திஹார்  சிறையில்  இருக்கும்  சுகாஷ்   சந்திர  சேகரன்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர  50  ரூபா கோடி இலஞ்சம் பெற்றது உள்ளிட்ட  200 கோடி மோசடி வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகரின்  ரூபாசென்னை கானாத்தூர் வீட்டில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள்  கடந்த  13  ஆம் திகதி  முதல்   ஆரு நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.   இந்த சோதனையில் 20 சொகுசு கார்கள், மடிக்கணனி, 2 கிலோ தங்கம்  உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரட்டை இலை சின்னத்தை  மத்திய‌  தேர்தல் ஆணையத்திடம்  இருந்து  பெறுவதற்காக தினகரனிடம்  50 கோடி ரூபா இலஞ்சமாக‌ தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்ற சுகேஷ் சந்திரா என்ற சதீஷ் சந்திரா  பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து சுகேஷ் சந்திராவை இலஞ்ச ஒழிப்பு பொலிஸார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து அப்போது ரூ1.3 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது.

 சுகேஷ் சந்திரா மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வங்கிகளில் கடன்பெற்று மோசடி என்பது உள்ளிட்ட  200 கோடி ரூபாசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுகேஷ் சந்திரா தற்போதும் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார். ஆனால் திகார் சிறையில் இருந்தபேடி பணம் பறிப்பு, ஆட்கடத்தல் என பல குற்றசெயல்களில் சுகேஷ் சந்திரா ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில்தான் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையை அடுத்த கானாத்தூரில் உள்ள சுகேஷ் சந்திராவின் சொகுசு பங்களாவில்  நாட்களாக சோதனை நடத்தினர்.

   தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது; அவரிடம் நான் பேசியதும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார் தினகரன். மேலும் இது தொடர்பாக டெல்லி   பொலிஸார்  முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார் தினகரன். அவரிடம் 4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில்    தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தினகரன்  பிணையில் விடுதலையானார்.

சுகாஷிடம்  ஒப்புதல்  வாக்கு  மூலம்  பெற்று  தினகரனைக் கைது  செய்ய  முயற்சி செய்யப்படுவதாக  தினகரன்  தரப்பு  தெரிவிக்கிறது.கொடநாடு   கொள்ளை, கொலை வழக்கின்  முக்கிய  சந்தேக  நபரான சயந்தனிடம்   இரகசிய பொலிஸார் வாக்கு மூலம்  பெற்றுள்ளனர்.  தனது  பெய ர்    அதில்  இருக்குமோ என்ற  சந்தேகம் முன்னாள் முதல்வர்  எடப்பாடிக்கு  ஏற்ப‌ப்டதால்  அவர்  பதற்றமடைந்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு எஸ்டேட் விவகாரம் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டட மோசடி விவகாரம் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நோக்கி காய் நகர்த்தப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் செக்  வைக்கப்பட்டதால்  அது  சசிகலாவுக்கு  சாதகமாகி  விடும் என பாரதீய  ஜனதா  க ண‌ க்குப்  போடுகிறது.

இதனால்,பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலா இருந்தபோது நிறைய சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரத்தை திடீரென கர்நாடகாவை ஆளும் பாரதீய  ஜனதா   சட்டரீதியாக துரிதப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, சசிகலா தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். திடீரென மௌனமாகிவிட்டார். வேறு ஒரு வழக்கில் தற்போது சுகேஷ், டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கிறார். இரட்டை இலை பெற லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் மீண்டும் துரிதப்படுத்தப்பட்டால், தினகரனுக்கும் சசிகலாவுக்கும்  பெரிய தலைவலியாகும்.

தினகரனும்,சகிகலாவும்  பல  வழக்குகளுக்கு  முகம்  கொடுத்தவர்கள். எடப்பாடி   பழனிச்சாயும்  , ஓ. பன்னீர்ச்செல்வமும்,  அரசியல்  ரீதியான  முதல்  வழக்கை  எதிர்  நோக்கப்  போகிறார்கள்.நான்கு  தலைவர்களும்  அரசியல்  வழக்குகளை  எப்படி  எதிர்  நோக்கப்  போகிறார்கள் என்பதை அறிய  தொண்டர்கள்  ஆவலாக  இருக்கிறார்கள்.

No comments: