பிரதான
ஒளிபரப்பு நிலையத்தில் 20 மொழிபெயர்ப்பு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருப்பவர்களுக்கு மொழி ஒரு தடை
அல்ல.ஒருவர் ஆங்கிலத்தில் ஏதாவ்து
கேட்டால் மற்றர் பிரெஞ்சில் பதிலளிப்பார்.
இன்னொருவர் இலத்தீனில்
கருத்துச் சொல்வார். ஸ்பானிஷ், ஜேர்மன், ரஷ்யன், இத்தாலியன், அரபு,
சீன மொழிகள் அங்கே எதிரொலிக்கும்.
அங்கு பணியாற்றுபவர்கள் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில்
உரையாடுவார்கள். ஒலிம்பிக்கில்
மொழிபெயர்ப்பில் எந்தத் தவறும் இருக்காது என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் உறுதி
செய்கிறார்கள்அலெக்ஸாண்ட்ரே
பொனோமரேவ் ஒலிபரப்பு
வர்ணனையாளர்களின் தலைவராவார். மயூரீன் ஸ்வீனி துனைத்
தலைவராவார். இவர்கள் இருவரும் மிடில்பரி
இன்ஸ்டிடியூட் முன்னாள் மாணவர்களாவர். இவர்களின் கீழ் நிறுவன
ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட
ஊதியம் பெறும் தொழில்முறை மொழி
பெயர்ப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட மொழி
தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்
பணியாற்றினார்கள்.
எம்.பி ஏ பட்டதாரியான பொனோமரேவ் 2008 , 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார், 2016 ஒலிம்பிக்கில் தலைமை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்,
ஸ்வீனி ,நான் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் மொழி சேவைத் துறையில் தொழில்முறை விளக்கத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகத் கடமியாற்றினார். அப்போதிருந்து 12 ஒலிம்பிக் அமைப்புக் குழுக்களுக்காக மொழிச் சேவைகளில் பணியாற்றினார். பொனோமரேவ் , ஸ்வீனி ஆகிய இருவரும் 2016 ல் ரியோ, 2018 இல் பியோங்சாங் ஒலிக்பிக் போட்டிகளில் தலைமை மற்றும் துணை தலைமை மொழிபெயர்ப்பாளர்களாக கடமையாற்றினார்கள்.
ஒலிம்பிக்
போன்ற ஒரு முக்கிய சர்வதேச
போட்டியை உலகளாவிய ரீதியில்
தெரிவிப்பதற்கு மொழி பெயர்ப்பாளர்கள் குழுவை
ஒன்று சேர்ப்பது என்பது சிறந்தவற்றில் சிறந்தவர்களை
நியமிப்பதாகும். "வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்கும் ஒரு
ஆலோசனை மொழிபெயர்ப்பாளராக, நான் பல ஆண்டுகளாக
ஒவ்வொரு கண்டத்திலும் சிறந்த தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின்
பட்டியலை உருவாக்கியுள்ளேன்.
"ஒலிம்பிக் விளையாட்டுக்காக
நாங்கள் தொழிலில் சிறந்தவர்களை வேலைக்கு அமர்த்துகிறோம், எப்போதுமே முந்தைய ஒலிம்பிக் அனுபவத்துடன்."
பின்னணி அறிவு மற்றும் பொருள்
நிபுணத்துவம் முக்கியமானதாகும்.எங்கள் அணியின் சில
உறுப்பினர்கள் முன்னாள் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்கள் விளையாட்டு
மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப துறைகளில் ஆழ்ந்த அறிவைக் கொண்டுள்ளனர்
என தனது குழுவைப் ப
ற்றி பொனோமரேவ் தெரிவித்தார்
ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளுக்கு இடையே 30 மொழிகளில் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, உயர்தர விளக்கத்தை அளிக்கும் திறனாய்வாளர்கள், மிகுந்த மன அழுத்தத்தில் பணிபுரியும் திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் பயன்படுத்தும் தலைப்புகள் பெரும்பாலும் இந்த பத்திரிகையாளர் மாநாடுகளில் பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர்களால் உருவாக்கப்படுகின்றன.
விளையாட்டு வீரர் வெற்றிக் கம்பத்தைத் தொடும்போது அவரைப் பாராட்ட வேன்டும், தோல்வியடையும் வீரருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். பொனோமரேவும் அவரது பெரும்பாலான ஊழியர்களும் ஜி 20 அல்லது உலகப் பொருளாதார மன்றம் போன்ற உயர் சக்தி வாய்ந்த அரசியல் நிகழ்வுகளில் பணியாற்றியுள்ளனர், அவை ஒலிம்பிக்கை விட மிகவும் கடினமானவை.
ஜேர்மன்,
ரஷ்யா போன்ற நாடுகளில்
உள்ள சில சொற்களை
இலகுவாக மொழி பெயர்க்க முடியாது. நீண்ட
விளக்கங்கள் மூலம் நாங்கள் வேறொரு
மொழிக்கு மாறுவோம், மக்கள் உடனடியாக புரிந்துகொள்வார்கள்
என பொனோமரேவ் தெரிவித்தார்.
ரஷ்யன், உக்ரேனியன், ஆங்கிலம், ஜேர்மன், ஸ்பானிஷ், பிரஞ்சு ,டேனிஷ் , ஸ்வீடிஷ், போர்த்துகீசியம், இத்தாலியன், நார்வேஜியன் என
பதினைந்துக்கும் மேற்பட்ட
மொழிகளில் பொனோமரேவ் தங்குதடையின்றி கதைப்பார்.
ரஷ்யாவில் வாழ்ந்தபோது பொனோமரேவ்வின் தாய் அவருக்கு மொழிகளைக் கற்றுக்கொடுத்தார். அமெரிக்க படங்களின் வீடியோக்கள் மூலம் முதலில் ஆங்கிலத்தைக் கற்கத்தொடங்கினார்.
No comments:
Post a Comment