பெண்களுக்கான 400 மீற்றர் ஹேடில்ஸில் பங்குபற்றுவதற்காக இங்கிலந்தில் இருந்து டோக்கியோவுக்குச் சென்ற 27 வயதுடைய எஸ்ஸி நைட் சுவட்டில் தயாராக நின்றார். எஸ்ஸி நைட்டின் பெயர் ஒலிபெருக்கியில் அறிவிக்கபட்டபோது கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆரம்பப்பள்ளி
ஆசிரியையான எஸ்ஸி நைட், ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்காக வேலையை உதறி
பயிற்சி பெற்றார். நைட் எதிர்பார்த்த தருணம்
வந்ததும், தனது முழுப்பலத்தையும் சேர்த்து
ஓடத்தொடங்கினார். முதலாவது ஹேடில்ஸை நெருங்கியதும் மூச்சு விட முடியாது
தடுமாறி விழுந்தார்.
இங்கிலாந்தில்
இருந்து டோக்கியோவுகுச் விமானத்தில் சென்றபோது கொரோனா தொற்று இருக்கலாம்
என சந்தேகப்பட்டு சோதனை செய்த ஒருவருடன்
நெருக்கமாக இருந்துள்ளார். அதன் காரணமாக ஒலிம்பிக்
கிராமத்தில் எஸ்ஸி நைட் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பயிற்சி, விளையாட்டுகான முன்னேற்பாடு எல்லாம் எஸ்ஸிக்கு தடைப்பட்டன.
ஒலிம்பிக்கில்
பங்குபற்றுவதற்காக எஸ்ஸி நைட் பல
வருடங்களாக மேற்கொண்ட
முயற்சிகள் அனைத்தும் ஒரு நொடியில் தவிடு
பொடியானது
No comments:
Post a Comment