Tuesday, August 24, 2021

அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து  படைகளை வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்கா துரிதமாக  மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் 31 ஆம் திகதிக்குள்  படைகளை விலக்க  வேண்டும். அமெரிக்காஜேர்மனி,   இங்கிலாந்து  ஆகியா நாட்டு இராணுவ  வீரர்கள் தம் நாட்டுப் படைகளை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்த வெளிநாட்டுப் படைகளுக்கு உதவிய ஆப்கானியரும் அவர்களின் குடும்பங்களும் பாதுகாப்பு அச்சம் காரணமாக தாய் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.


அம்ரிக்கா எதிர்பார்த்தது போன்று  31  ஆம் திகதிக்குள் அனைத்து  படைகளும்  வெளியேற முடியாத  நிலை உள்ளது. அமெரிக்க  ஜனாதிபதி ஜோ  பைடனும் இதனை  ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், வெளிநாட்டுப் படைகள் 31  ஆம் திகதிக்குள்  வெளியேற  வேண்டும் என  தலிபான் பேச்சாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே கடுமையான வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்ஆப்கானிஸ்தானில் பணியாற்றியமேற்கத்திய நாட்டவரை பாதுகாப்பாக வெளியேற்ற கடைசி தேதியை மேலும் நீடிக்க வேண்டும் என்று பல நாடுகளும் கோரிவருகின்றன.

தங்கள் நாட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலேயே தங்கினால் அவர்கள் தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்று அந்த நாடுகள் கருதுகின்றன. இதனை தலிபான்கள்  ஏற்றுக்கொள்வார்களா அல்லது  தாக்குவார்களா என்பதை   உறுதியாகக்  கூறமுடியாது.

தலிபான்கள் வாகுறுதியளித்தது போல்   அமெரிக்கபப்டைகள் மீது  தாக்குதல் நடத்தவில்லை என பைடன் தெரிவித்துள்ளார். ஆனால், ஆப்கான் மக்களை பழிவாங்க மாட்டோம், துன்புறுத்த  மாட்டோம் என வாக்குறுதியளித்த  தலிபான்கள் அந்த  வாக்குறுதியக் கைவிட்டுள்ளனர்.

அமெரிக்க  ஜனாதிபதி இதுபற்றி பெரிதாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின்  கட்டுப்பாட்டில் உள்ளது.அங்கு பல ஆயுதக் குழுக்கள் இருப்பதாக  புலனாய்வுத் தகவல்கள் தெரிவிகின்றன. அந்தக் குழுக்களின் மூலம் ஆபத்து  வரலாம் என  அமெரிக்காவும் நேச  நாடுகளும் அஞ்சுகின்றனவிமான நிலயத்துக்கு மிக நெருக்கமாக மக்கள் குழுமியுள்ளதால் மீட்பு விமானங்கள் மீது  தாக்குதல் நடத்தப்படலாம் எனபதற்காக வெப்பத்தி வெளியேற்றி  மிகப் பாதுகாப்புடன்  விமானங்ககள் தரி இறங்குகின்றன.தலிபான்களின் எழுச்சியைத் தொடர்ந்து காபூலில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களையும், வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற உதவுவதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடெட் உள்ளிட்ட அமெரிக்க வணிக விமான நிறுவனங்கள் உதவுகின்றன.ஆப்கானில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் கட்டார், பஹ்ரைன் ,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்கத் தளங்களங்களுக்கு கொண்டு செல்லபப்டுகிறார்கள். அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும்,   அமெரிக்காவிற்கும் வணிக விமானங்கள்  மூலம்  கொண்டு செல்லபப்டுவார்கள். பிடென் நிர்வாகத்தின்படி, 15,000 அமெரிக்கர்களும், 50,000 முதல் 60,000 ஆப்கானிய கூட்டாளிகள் வெளியேற்றப்பட வேண்டும்.

சிவில் ரிசர்வ் ஏர் ஃப்ளீட் இரண்டு முறை மட்டுமே செயல்படுத்தப்பட்டது-1990-1991 வளைகுடாப் போருக்கு ஒரு முறை துருப்புக்களை ஏற்றியஹு, பின்னர்  2002-2003 இல் ஈராக் படையெடுப்புக்காக துருப்புகளுடன் பறந்தது. இப்போது  மூன்றாவது  முறையாக  பறக்கிறது.

  ஆப்கானிஸ்தானிலிருந்து ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு  ஓகஸ்ட் 21  ஆம் திகதி சென்ற  விமானத்தில்   ஆப்கானிய பெண் குழந்தையைப் பிரசவித்தார் என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.அந்த விமானம் தரை இறங்கிய பின்பு அதற்குள் சென்ற மருத்துவ ஊழியர்கள் விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதிக்குள் வைத்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.அந்த விமானத் தளத்திற்கு அருகே இருக்கும் மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அப்பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டது. எனவே விமானத்தின் உள்பகுதியில் காற்றழுத்தத்தை அதிகரிப்பதற்காக, விமானி அந்த விமானம் பறந்து கொண்டிருந்த உயரத்தை குறைந்ததாகவும் அது காற்றழுத்தத்தைச் சீராக்கி, தாயின் உயிரைக் காப்பாற்ற உதவியது என்றும் ஏர் மொபிலிட்டி கமாண்ட் ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.

அகதிகளை ஏற்பதில் ஒவ்வொரு நாடும் தனி கொள்கைகளை பின்பற்றி வருகின்றன. அந்த கொள்கைக்கு மாறாக, புதிய அகதிகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது என்பதால், இப்போது அகதிகளாக செல்லும் ஆப்கானியர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, இங்கிலாந்து,கனடா  உள்ளிட்ட சில நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகளை, சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கின்றன.  2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.8 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளிநாடுகளில் உள்ளதாக யு.என்.ஹெச்.சி.ஆர் (UNHCR) தெரிவித்துள்ளது. இன்றைய  நிலயில் அத்தொகை மேலும் அதிகரிக்க  வாய்ப்பு  உள்ளது.

காபூல் விமான நிலையம் மீது .எஸ்..எஸ்.‍ -கே  இயக்கம், தற்கொலைப்படை தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறதுஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களைக் கொண்ட அமைப்பாகும். இதன் தலைவர்கள் ஏற்கனவே அமெரிக்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனாலும் இந்த அமைப்பு இப்போது மீண்டும் உயிர்ப்புடன் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 காபூலில் தொடர்ந்து தமது நாட்டு இராணுவத்தை  அமெரிக்கா நிலை  நிறுத்தும் என்ற சந்தேகம் தலிபான்களுக்கு  உள்ளது. அதன் காரணமாகத்தான் ஓகஸ்ட்  31  ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தா மோசமான  விளைவுகள் ஏற்படும் என  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா படைகளுடன் மீண்டும் மோதுவதற்கு தாலிபான்கள் தயாராகிவருகின்றனர்.

No comments: