Saturday, August 21, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்

 

 பெண்களுக்கான 137 கிலோ மீற்றர் சைக்கிள்  ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய  வீராங்கனைகள் அனைவரும்  ஒருவருக்கொருவர்  விட்டுக்கொடுக்காமல்  சைக்கிளை ஓடிக்கொண்டிருந்தனர். நெதர்லாந்து  வீராங்கனையான  அன்னேமிக்  வான் வ்லூட்டன், நிமிர்ந்து  பார்த்தார்.  அவருக்கு முன்னால் எவரும் இல்லை.   அன்னேமிக் வான் வ்லூட்டன் தனக்கு  தங்கம் என்ற நம்பிக்கையில் எல்லைக் கோட்டைத் தாண்டியதும் இரண்டு  கைகளையும் உயர்த்தி மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார்.

அன்னேமிக் வான் வ்லூட்டன்னுடைய மகிழ்ச்சி  அதிக நேரம்  நீடிக்கவில்லை. அவர்  எல்லைக்  கோட்டைத்  தாண்டுவதற்கு 75  விநாடிகளுக்கு முன்னர் அன்னா கீசன்ஹோஃப்பர், முதல் ஆளாக எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டார்.

அன்னேமிக் வான் வ்லூட்டன்  பாதை  மாறி சிறுது  தூரம்  சென்ற  பின்னர்  சரியான  பாதையில்  போட்டியைத் தொடர்ந்தார். அந்த  இடைவெளியில் அன்னா கீசன்ஹோஃப்பர் எல்லைக்  கோட்டைத் தொட்டு  தங்கம் பெற்றார். தனக்கு முன்னால் ஒருஅவ்ர்  செல்வதை அன்னேமிக் வான்  வ்லூட்டன் பார்த்திருந்தால் கியரை மாற்றி வேகத்தை அதிகரித்திருப்பார்.40 கிலோமீற்றர்ருக்கும் அதிகமான தூரத்தில் அன்னேமிக் வான் வ்லூட்டன் பிரிந்த அவரை மற்றையவர்கள் மறந்து  விட்டனர்.

விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் அவர்களின் ஆதரவுக் குழுக்களுக்கும் இடையே வானொலி தொடர்பு இல்லாததே இதற்குக்  காரண‌ம் எனக்  கூறப்படுகிறது. சவாரி செய்வோருக்கு தகவல்தொடர்புகளை எளிதாக்க  டோகியோவில்  அனுமதி  வழங்கப்ப‌டவில்லை.

ரியோவில் நடந்த 2016 கோடைகால விளையாட்டுப் போட்டிகளில், வான் வுலூட்டன் அதே போட்டியில் தங்கம் வெல்லும் முன் ஒரு பயங்கரமான விபத்தை எதிர்கொண்டார்.

No comments: