டோக்கியோ
ஒலிம்பிக்கில் வெற்றி பெறும் வீரர்களையும், சாதனைகளையும் பார்த்து அனைவரும்
மகிழ்ச்சியடைகின்றனர். சாதனிக்காக களம் இறங்கி சோதனையைச்
சந்தித்தவர்களின் கதைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. துரதிருஷ்டவசமான
தோல்விகளால் சில வீரர்கள் துவண்டு
போயுள்ளனர்.
ஆனால்
உலகின் சில சிறந்த விளையாட்டு
வீரர்களும் துரதிர்ஷ்டத்திற்கு பலியாகியுள்ளனர் உபகரணங்கள் கைவிட்டமை, மோசமான தவறான தீர்ப்புகளால்
சில வீரர்கள்
களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நாம்
அனைவரும் தடகளத்தின் நம்பமுடியாத சாதனைகளைப் பார்த்து மகிழ்ந்தாலும், சில நேரங்களில் தவறாகப்
போகும் விஷயங்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
இசு வெலோட்ரோமில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2021 விளையாட்டுகளின் 10 வது நாளில் ஆண்களுக்கான தகுதி பெறும் 4000 மீ டிரக் சைக்கிள் போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவின் சார்பில் நான்கு வீரர்கள் கலந்துகொண்டார்கள். 25 வயதான அலெக்சாண்டர் போர்ட்டர் நான்காவது வீரராக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அலெக்சாண்டர் போர்ட்டரின் சைக்கிள் வ ளைவு ஒன்றில்
முட்டியது போலிருந்தது. அடுத்தகணம் போர்ட்டர் தலை குப்புற விழுந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு வினோதமான அதிவேக
விபத்தை அவர்
சந்தித்தார்.
அலெக்சாண்டர் போர்ட்டருடைய சைக்கிளின் கைப்பிடி உடைந்ததால் அவர் தலை உப்புற விழுந்தார். முகம், கை, கால் என்பன உரசுப்பட்டு காயமடைந்தார். போர்ட்டர் கடைசி ஆளாகச் சென்றதால் மற்றையவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவுஸ்திரேலியா தவற விட்டது
No comments:
Post a Comment