பாகிஸ்தான் கிரிக்கெட் கப்டன்
பாபர் ஆசம் ரி20 கிரிக்கெட்டில் 7,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த முதல் வீரர் என்ற
சாதனையை நிகழ்த்தினார்.
ஞாயிறன்று நேஷனல் ரி20 கிண்ண கிரிக்கெட் ராவல்பிண்டியில் சதர்ன் பஞ்சாப் அணிக்கு அணிக்குஎதிரான போட்டியில் செண்ட்ரல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய பாபர் ஆசம் 25 ஓட்டங்களை அடித்தபோது அதிவிரைவில் 7,000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற மைல்கல்லை ஏற்படுத்தினார். கிறிஸ் கெய்ல் 192 போட்டிகளில் 7000 ரி20 ஓட்டங்களையும் விராட் கோலி 212 போட்டிகளில் 7,000 ரி20 ஓட்டங்களையும் எடுக்க பாபர் ஆசம் 187 போட்டிகளில் 7,000 ஓட்டங்கள் மைல்கல்லை கடந்து வரலாறு படைத்தார்.
நேஷனல் ரி20 கோப்பையில் இதுவரை
6 போட்டிகளில் 259 ஓட்டங்கள் எடுத்துள்ளார் பாபர். ஏற்கெனவே இந்தத் தொடரில் ஒரு செஞ்சுரி
அடித்துள்ளார். அதே போல் ரி20 கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்தவர்கள் வரிசையிலும் விராட்
கோலியைக் கடந்தார் பாபர். விராட் கோலி 5 சதங்களை மட்டும் எடுக்க பாபர் ஆசம் 6 வது சதத்தை
கடந்த வாரம் எடுத்தார்.அதிக சதம் எடுத்ததில் ஷேன் வாட்சன், ரோகித் சர்மா ஆகியோரையும்
பாபர் ஆசம் கடந்து விட்டார்.
ரி20,கிறிக்கெற்,விளையாட்டு,பாகிஸ்தான்,இந்தியா
No comments:
Post a Comment