Friday, October 8, 2021

பரகுவேக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்காத ஆர்ஜென்ரீனா


 

உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் பரகுவே , ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததனால் சமநிலையில் முடிந்தது.

  ஜூன் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ஆர்ஜென்ரீனா  கோல் அடிக்கவில்லை. ஆனால் வியாழக்கிழமை பராகுவேயில் 0-0 என்ற கோல் கணக்கில் சம நிலையானதால்  தென் அமெரிக்காவின் 2022 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தோல்வியடையாத சாதனையை தக்க வைத்துக் கொண்டது .

அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியின் கீழ் 23 போட்டிகளில் தோல்வியின்றி 19 புள்ளிகளுடன் தகுதி குழுவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

  வெனிசுலாவுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்ற பிறேஸில்  தென் அமெரிக்காவில் 27 புள்ளிகள் பெற்ற ஒரே அணியாக  உள்ளது

No comments: