Tuesday, October 19, 2021

ஒலிம்பிக் சுடருக்கு இடையூறு செய்த திபெத்தியர்கள்


  பீஜிங்கில் அடுத்த  ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடர் ஒலிம்பியாவில்  ஏற்றப்பட்ட போது   இடையூறு செய்த திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ள‌னர்.

 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக் , சீன அதிகாரிகள் உட்பட பல  முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒலிம்பியாவில் நடந்த விழாவின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திபெத் கொடியையும், பதாகைகளையும் காட்டி இடையூறு செய்தனர். கொடி மற்றும் பேனரை இழுத்தனர்.

 அடுத்த ஆண்டு நடைபெறும் விளையாட்டுகளைப் புறக்கணிக்குமாறு மூன்று திபெத் ஆர்வலர்கள் ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு நடந்த இந்த சம்பவம், 2008 பீஜிங் கோடைக்கால விளையாட்டுக்குப் பிறகு சீனாவில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டிகளை எதிர்கொள்ளும் சவால்களை விளக்குகிறது.

திபெத்தை சீனா ஆக்கிரமித்ததால் அங்ருந்த பலர் வெளியேறிவிட்டானர்.  திபெத்தில் சீன மத்திய அரசு மத அடக்குமுறை, சித்திரவதை மற்றும் தங்கள் கலாச்சாரத்தை அழிப்பதாக நாடுகடந்து வாழும் திபெத்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  செமி லாமோ, ஜேசன் லீத் , ஃபெர்ன் மெக்டோகல்  ஆகியோரே ஆர்ப்பாட்டம் செய்ததாக லண்டனை தளமாகக் கொண்ட ஃப்ரீ திபெத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்  உறுதிப்படுத்தினார்.

2022 பெப்ரவரி 4 முதல் 20 வரை குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில்சுமார் 85 தேசிய ஒலிம்பிக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 2,900 விளையாட்டு வீரர்கள்  பங்கேற்பார்கள்.

"இந்த கடினமான காலங்களில் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு பீஜிங் 2022 உலகை அமைதி, நட்பு மற்றும் ஒற்றுமையின் உணர்வில் ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும்" என்று பாக் கூறினார்.

No comments: