Monday, October 18, 2021

பிபாவின் யோசனைக்கு ஒலிம்பிக் கூட்டமைப்பு எதிர்ப்பு


 இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆண்கள் உகலக்கிண்ணப் போட்டியை  நடத்தும் பீபாவின் யோசனைக்கு  ஒலிம்பிக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ள‌து.

  "பீபாவின்  விவாதத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்" என்று ஒலிம்பிக்  கூட்டமைப்புத் தலைவர் தாமஸ் பாக் கடந்த மாதம் கூறினார்.  ஆனால்,  அவரது அமைப்பு சனிக்கிழமையன்று ஏதென்ஸில் கூடி, உதைபந்தாட்ட முன்னாள் வீரர்களுடன் பகிர்ந்துகொண்ட ஆட்சேபனைகளை விவாதித்தது.

"பீபாவின் திட்டத்தால் மற்றைய போட்டிகளி அட்டவணைகளில்  பாதிப்பு ஏற்ப‌டும் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  டென்னிஸ், சைக்கிள் ஓட்டுதல், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், தடகளம், ஃபார்முலா1 போன்ற விளையாட்டுகள்  உலகக் கிண்ணத்தின் புதிய அட்டவனையால் பாதிக்கப்படும்.இதனால் உதைபந்தாட்டம் தவிர  தவிர மற்ற விளையாட்டுகளின் பன்முகத்தன்மை மற்றும் வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" என்று ஒலிம்பிக் அமைப்பு கூறியது.

 

 

விளையாட்டு.உதைபந்தாட்டம்,ஒலிம்பிக்

No comments: