Sunday, October 3, 2021

உலக தடகள சாம்பியன்ஷிப்பை நடத்த ஜப்பான் ஆர்வம்


 

 உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் ஆவம் கொண்ட ஜப்பான், 2025  ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு முயற்சி செய்கிறது.

டோக்கியோவில் உலக தடகள சம்பியன்ஷிப்பை நடத்துவதற்கான கோப்புகளை  ஜப்பான் தடகள கூட்டமைப்பின் சங்கம் சமர்ப்பித்துள்ளத. ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் முடிந்த பிறகு ஜப்பான் தேசிய அரங்கத்தை ஒரு பிரத்யேக உதைபந்தாட்ட‌ மைதானமாக மாற்ற முடிவு செய்தது, ஆனால் இப்போது அந்த முயற்சியை கைவிட்டுள்ளது. உலக தடகள சம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு  10 பில்லியன் யென் ($ 90 மில்லியன்) செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  1991 ஆம் ஆண்டு டோக்கியோவிலும் 2007 ஆம் ஆண்டு   ஒசாகாவிலும் உலக தடகள சம்பியன்ஷிப் நடைபெற்றது. அடுத்த ஆண்டு  ஓரிகானின் யூஜினில் நடைபெறும் உலக தடகள சம்பியன்ஷிப்   2023  ஆம் ஆண்டு  புடாபெஸ்டில் நடைபெற உள்ளது.

No comments: