Tuesday, October 12, 2021

உலகக்கிண்ண ரி20 யில் தொடரில் டிஆர்எஸ் அறிமுகமாகிறது


ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  ஓமான் ஆகிய நாடுகளில்  ரிஉலகக் கிண்ணப் போட்டித் தொடர் இம்மாதம் 17 ஆம் திகதி முதல்  நவம்பர் 14 ஆம் திகதி வரை நடக்கிறதுஇந்தப் போட்டித் தொடரில்டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்த ஐசிசி முறைப்படி அனுமதி அளித்துள்ளது

ஒவ்வொரு அணிக்கும் இரண்டு டி.ஆர்.எஸ்வாய்ப்புகள் உண்டுஅதாவது இருமுறை களத்தில் கொடுக்கும் ஆட்டமிழப்பு தீர்ப்பைஅல்லது நாட் அவுட் தீர்ப்பை 3வது நடுவர் அல்லது தொலகி காட்சி நடுவரிடம் மேல்முறையீடு செய்து ரிவியூ செய்ய அனுமதி உண்டு.. டிஆர்எஸ் முறை முதன்முதலாக கரிபீயனில்நடந்த மகளிர் ரி20 போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டதுஅதன்பின் 2020ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ரி20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில்  நடைமுறைப் படுத்தப்பட்டது

கடந்த ஜூன் மாதம் ஐசிசி வெளியிட்ட அறிக்கையின்படிகிரிக்கெட்டின் அனைத்துப் போட்டிகளிலும் கூடுதலாக ஒருடிஆர்எஸ் ரிவியூ சேர்க்க அனுமதிக்கலாம்அனுபவம் குறைந்த நடுவர்கள்அதிகமான வேலைப் பளு மற்றும் தவறு மனித இயற்கை என்பதன் காரணமாக சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வர நேரலாம் என்பதால்டிஆர்எஸ் ரிவியூ கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது

ஆதலால்,இந்த உலகக் கிண்ண போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு இன்னிங்ஸுக்கு 2 டிஆர்எஸ் ரிவியூ வழங்கப்படும்டெஸ்ட் போட்டிகளில் 3 ரிவியூகளும்ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில்ரிவியூகளும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments: