Thursday, October 7, 2021

சென்னை அணியில் டோமினிக் டிரேக்ஸ்


 ஐக்கிய அரபு எமரேட்ஸில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன‌ டெல்லி , சென்னை , பெங்களூரு ஆகிய  அணிகள்  பிளே ஆப் சுற்றுக்கு  தகுதி பெற்றுவிட்டன.  நான்காம் இடத்துக்கு கடிமையான போட்டி  நிலவுகிறது.

 சென்னை அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் முதுகு வலி காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டது.  பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மாற்று வீரரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 மேற்கு இந்திய  வீரரான ஆல்ரவுண்டர் டோமினிக் டிரேக்ஸ்-ஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இளம் வீரரான டோமினிக் டிரேக்ஸ் இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும் டி20 லீக் போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் கரீபியன் லீக் தொடரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி இறுதி போட்டியில் வெற்றி பெற இவர் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துல்லியமான பந்துவீச்சாளராக செயல்படும் இவர் துடுப்பாட்டத்திலும் அதிரடியாக விளையாட கூடியவர் என்பதால் டோமினிக் டிரேக்ஸ் நிச்சயம் இவர் சிஎஸ்கே அணிக்கு நல்ல வரவு தான்

No comments: