Tuesday, October 26, 2021

சிக்ஸர் அடிக்காத நட்சத்திர வீரர்கள்

ரி20 கிறிக்கெற்  போட்டியீல் துடுப்பாட்ட வீரர்கலின் அகையே அதிகமாக ஓங்கி இருக்கும். மூன்றுமணித்தியாலங்களில் ரசிகர்களை  இருக்கை நுனியில் வைத்திருக்கும் ரி20 க்கு ரசிகர்கள் அதிகம். ஒரு ஓவரில் இரன்டு அல்லது  மூன்று சிக்ஸர்கள் அடித்துவிட்டால்  போட்டியில் நிலை தலை கீழாகிவிடும். கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற வரலாறும் ரி20 யில் உள்ளது. பவர் பேவர்பிளே, டெத் ஓவர்களில் சிக்ஸர்கள் பறப்பதால்  சிக்சர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

  120 பந்துகளை கொண்ட போட்டி என்கின்ற காரணத்தினால் ஒரு போட்டியில் குறைந்தபட்சம் 8 முதல் 10 சிக்ஸர்களாவது ரி20 கிரிக்கெட்டில் வந்துவிடும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு போட்டியில் சிக்சர்கள் அடிக்காமல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மூன்று சிறப்பான வீரர்கள் பற்றிய குறிப்பு இது;

ஆண்ட்ரு ஸ்டார்ஸ் :

இங்கிலாந்து அணியின் முன்னாள் ப்டனான இவர் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வீரராக  இருந்தும் ரி20 கிறிக்கெற்றில் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் 73 ஓட்டங்களை மட்டுமே அடித்துள்ளார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும் இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சிக்சர் விளாசிய கிடையாது. –

 அம்பத்தி ராயுடு :

 சென்னை அணிக்காக ஏகப்பட்ட சிக்சர்களை இவர் விளாசித் தள்ளியுள்ளார். ஆனால் சர்வதேச கிறிக்கெற்றில் ரி இந்திய அணிக்காக ஐந்து  ரி20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள அவர் 42 ஓட்டங்களை மட்டுமே அடித்துள்ளார். இவரும் சர்வதேச றிக்கெற்றில் சிக்ஸர் அடிக்காமலேயே அணியில் இருந்து வெளியேறினார்.

 ஸ்டீபன் பிளமிங் :

தற்போதைய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர் நியூசிலாந்து அணிக்காக ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மிகப் பிரபலமான வீரரான  இவர் தனது றிக்கெற்றில் வாழ்க்கையில் ஐந்து ரி20 போட்டிகளில் விளையாடி 110 ஓட்டங்களை அடித்துள்ளார். அதில் 80 ஓட்டங்கள் பவுண்டரி மூலம் கிடைத்ததே தவிர ஒரு சிக்சர் கூட  அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: