Monday, October 4, 2021

ருதுராஜுக்கு வில்லனா ஜடேஜா?


 ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ்  93 ஓட்டங்கள் அடித்து செஞ்சரியை நெருங்கிக்கொண்டிருந்தார். அப்போது களம் புகுந்த ஜடேஜா, கிடைக்கும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டார்.

ஜடேஜா ஒரு ஓட்டம் எடுக்காது தொடர்ந்து இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். முதல்  ஓவரில் இருந்து களமாடிய ருதுராஜ்,  ஜடேஜாவுக்கு ஈடாக இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். ருதுராஜின் செஞ்சரியை எதிர்பார்த்த ரசிகர்கள் ஜடேஜாவை மனதில் திட்டியப‌டி போட்டியைப் பார்த்தார்கள். ஓட்ட எண்ணிக்கை உயர வேண்டும் அதே நேரம் ருதுராஜும் செஞ்சரி அடிக்க வேண்டும் ரசிகர்கள் பதற்றப் பட்டார்கள்.

 கடைசி மூன்று ஓவர்கள் இருந்த போது ருத்துராஜ் 93 ஓட்டங்க‌ள் எடுத்து பந்து வீச்சாளரின் பக்கம்  இருந்தார். ஜடேஜா துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். ருதுராஜ் செஞ்சரி அடிக்க ஜடேஜா உதவி  செய்வார் என எதிர் பார்க்கப்பட்டது.  ஆனால் அந்த ஓவர் முழுக்க ஜடேஜா விளையாடினார். பல இடங்களில் கஷ்டப்பட்டு இரண்டு ஓட்டங்கள் ஓடினார்கள். எங்குமே ஜடேஜா ஒரு ஓட்டம் ஓடவில்லை.  19வது ஓவரில் இதேபோல் ஜடேஜாதான் 5வது பந்து வரை விளையாடினார். 6வது பந்தில்தான் ருத்துராஜ் 2 ஓட்டங்கள் அடித்தார்  5 ஓட்டங்கள் எடுத்தால் சதம் என்று இருந்தது. 20 ஆவது  ஓவரில் ஆனால் ஜடேஜாவோ சிக்ஸ், பவுண்டரி என்று விளாசிக்கொண்டு இருந்தார். தனிப்பட்ட வீரரின் ஓட்ட எண்ணிக்கை தேவையில்லை, அணியின் ஓட்ட எண்ணிக்கை  தேவை என்று ஜடேஜா விளாசிக்கொண்டு இருந்தார்.  இதனால் ருத்துராஜ்   சதம் அடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் நிலவியது. 20 ஆவது  ஓவரின்   5வது பந்தை ருத்துராஜ் எதிர் கொண்டார். ஓட்டம் எடுக்கவில்லை.  6வது பந்தில் சிக்ஸ் அடித்து ருத்துராஜ் சதம் அடித்தார். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 ருத்துராஜ் 90 ஓட்டங்களை கடந்து ஆடிக்கொண்டு இருந்த போது சதம் அடிக்கும் சந்தர்ப்பத்தை ஜடேஜா வழங்கவில்லை என    இணையத்தில் கடும் விவாதம் எழுந்துள்ளது. இதில் உண்மையில் என்ன நடந்தது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

 90 ஓட்டங்களை கடந்த பின் ருத்துராஜ்தான் ஜடேஜாவை இரண்டு ஓட்டம் ஓட அழைத்தார் என்று கூறப்படுகிறது.  சதம் எடுப்பது முக்கியம் கிடையாது என்பதால்தான் அவர் இப்படி ஓடினார்.

  ஜடேஜா வேண்டும் என்றே எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கடைசி இரண்டு ஓவரை உன்னிப்பாக கவனித்தவர்கள், ருத்துராஜ்தான் பல இடங்களில் இரண்டு ஓட்டங்க‌ள் ஓட அழைத்தார் என்பதை எளிதாக கூறிவிட முடியும்.

No comments: