சார்ஜாவில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நடைபெற்ற ஐபிஎல் ரி20 யில் சென்னை சூப்பர் கிங்ஸ் கப்டன் எம்.எஸ்.டோனி 100 கட்ச்களைப் பிடித்து புதிய மைல்கலை எட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில் சென்னை
அணியின் கப்டனும்,விக்கெட் கீப்பருமான டோனி, விருதிமான் சாஹா, ஜேஸன் ராய், பிரியம்
கார்க் ஆகியோரை கட்ச் பிடித்து டோனி வெளியேற்றினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விக்கெட் கீப்பராக இருந்து 100 கச்ட்களை
டோனி பிடித்துள்ளார்.
இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம்
ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஸ்பெஷல் கிரிக்கெட் வீரர், ஸ்பெஷல் மைல்கல், சிஎஸ்கே
அணிக்காக விக்கெட் கீப்பராக இருந்து டோனி 100 கட்ச்களைப் பிடித்துள்ளார்”எனத்
தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக
இருந்து அதிகமான வீரகளை ஆட்டமிழக்கச்செய்த தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமீபத்தில்
டோனி முறியடித்தார். தினேஷ் கார்த்திக்கைவிட 8 வீரர்களை அதிகமாக டோனி ஆட்டமிழக்கச் செய்துள்ளார். டோனி 215 போட்டிகளில்
158 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதில் 119 கட்சுகள், 39 ஸ்டெம்பிங் ஆகும்.
ஐபிஎல் தொடரில் அதிகமான கேட்ச் பிடித்த வீரர்களில் தல டோனிக்குப் பின்னால் சின்ன தல வீரர் சுரேஷ் ரெய்னா 98 கேட்சுகளையும், மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் 94 கேட்சுகளையும் பிடித்துள்ளனர்.
ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல்
சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த வெற்றியின்மூலம் சிஎஸ்கே அணி 11 போட்டிகளி்ல் 9 வெற்றிகள், 2 தோல்விகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளேஆஃப் சுற்றையும் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் 11-வது முறையாக சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் முதல் அணியாக வெளியேறிய சென்னை இந்த முறை முதல் அணியாக உள்ளே சென்றுள்ளது.
No comments:
Post a Comment