அட்லெட்டிக்கோ மட்ரிட் ,பர்சிலோனா ஆகியவற்றுக்கிடை யே யான போட்டியில் தன்னை விற்றது தவறு என்பதை பர்சிலோனா அணிக்கு நிரூபித்து வருகிறார் லுயிஸ் சுவாரெஸ்.பர்சிலோனாவின் நட்சத்திரமாக் இருந்தவர் சுவாரச். அவரை பர்சிலோனா அண்மையில் விடுவித்தது. சுவாரெஸ் அட்லெட்டிகோ மட்ரிட் வாங்கியது.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஸ்பானிய லா லிகா
ஆட்டத்தில் தாமஸ் லெமார் ஒரு கோல் அடிக்க உதவிய சுவாரஸும் ஒரு கோல் அடித்ததால்
, அட்லெட்டிக்கோ மட்ரிட் அணியை 2-0 எனும்
கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியைத் தொடர்ந்து லா லிகா பட்டியலில் இரண்டாம்
இடத்திற்கு முன்னேறியது.
34 வயதிலும் அபாரமாக ஆடிவரும்
சுவாரெஸ், தனது விருப்பத்திற்கு மாறாக பார்சிலோனாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாகச் சொல்கிறார்.
மன வலியை உரமாக்கித் தனது ஆற்றலுக்கு மெருகூட்டி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கச்
செய்துவருகிறார். சென்ற பருவம், ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய
அட்லெட்டிக்கோ, ரியால் மட்ரிட், பர்சிலோனா அணிகளின் ஆதிக்கத்தை உடைத்தது. அதில் முக்கிய
பங்கு வகித்தவர் சுவாரெஸ்.
சில பழைய, வயதான வீரர்களை நீக்கி இளம் வீரர்களைக் கொண்டு சிறப்பான
புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பர்சிலோனா பயிற்சியாளர் ரோனல்ட்
கோமன். இருந்தாலும் லயனல் மெஸ்ஸியை விற்றது போன்ற அவரின் சில செயல்கள் பெரும் கண்டனத்திற்கு
உள்ளாகியிருக்கின்றன. பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் பார்சிலோனாவால் மெஸ்ஸி
போன்ற வீரர்கள் கேட்கும் சம்பளத்தை வழங்கவும் முடியவில்லை.
இத்தோல்வியைத் தொடர்ந்து பர்சிலோனா லீக் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது. மேலும், இந்தப் பருவதின் யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டியைப் படுமோசமாகத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் ரோனல்ட் கோமனுக்கு அணியின் நிர்வாகக் குழுவுடைய ஆதரவு உள்ளது.
No comments:
Post a Comment