Saturday, October 16, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களை அள்ளியது


 தமமிழகத்தின்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக்கட்சிகளும்  வெற்றி பெற்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டாளியான பாரதீய ஜனதாவும் படு தோல்வியைச் சந்தித்தன.சீமானையும், கமலையும் பின்னுக்குத்தள்ளிய  விஜய் மக்கள் இயக்கம்   அரசியலில்  தடம் பதித்துள்ளது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழ்கம்   1,145 இடங்களில் வென்றுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம்  கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம்மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக இருந்த  திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியை தழுவியுள்ளது.

 தமிழகத்தின் எதிர்க் கட்சியான அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தை விட அதிகமான இடங்கலில் காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகளும் வெற்றி பெற்றுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளை  திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியுள்ளது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக இருந்தபோது மக்களைக் கவனிக்காததும் இந்தத் தோல்விக்கும் காரணம். ஆட்சி இலாதபோது  இரட்டைத்  தலைமையால்  பிரயோசனம் இல்லை என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உணர வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஓரளவுக்கு பிரசாரம் செய்தார். பன்னீர்ச்செல்வம் ஒதுங்கி இருந்தார்.

எம்.ஜி.ஆரின் கட்சியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பின்னர் ஜெயலலிதாவின் கட்சியானது. ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் கட்சியைக் கைப்பற்ற  சசிகலா முயற்சி செய்தார். அவர் சிறைக்குச் சென்றதும் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டி இன்று வரை தொடர்கிறது.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரு பதவிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில்திராவிட முன்னேற்றக் கழகம்   138 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் வென்றது.  அதன் கூட்டணிக் கட்சிகள் 1,021 இடங்களையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  215 இடங்களையும், பா.ம.க. 45 இடங்களையும், அ.ம.மு.க. 5 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவீத இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம்  கைப்பற்றியுள்ளது.

2019-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்   பெரிய வெற்றியைப் பெற்று இருந்தாலும் இந்த அளவுக்கு மிக அதிக இடங்களைக் கைப்பற்றவில்லை. ஆறு மாதங்களுக்கு முன் இந்த மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை வாங்கியிருந்தது. ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல், தமிழக சட்டமன்றத்தேர்தல்,ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகிய மூன்றிலும் வெற்றி பெற்ற ஸ்டாலின் தன்னை ஆளுமை மிகுந்த தலைவர் என்பதை நிரூபித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது முதல் பல்வேறு விஷயங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தப்புச் செய்திருக்கிரது. பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது பலத்த அடியாக உள்ளது. சறுக்கியிருக்கிறது.  இதனால், வன்னியர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. தனித்துப் போட்டியிட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியாலும் வெற்றி பெற முடியவில்லை.

 எடப்பாடி அறிவித்த வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை வெளியிட்டு  திராவிட முன்னாற்றக் கழகம் வாக்குகளைப் பெற்றுள்ள‌து. கடைசி வரை நடந்த கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் அதில் எந்த முடிவும் இறுதிவரை எட்டப்படாததால் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே தொண்டர்களை வைத்திருந்தது.இவை எல்லாம் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னடைவுக்குக் காரணம் எனலாம்.

உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்தியது  ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துவிட்டது என  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய வன்முறை மோசடி எனவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ள‌து. ஆனால், மோசடி வன்முறை பற்றி புகார் எதுவும்  எங்கேயும் பதியப்படவில்லை.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின்  நான்குமாதகால  ஆட்சியின் மீது மக்களுக்குப் பெரியளவில் குறைகள் ஏதுமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஏழை, எளிய மக்களை முதலமைச்சர் சந்திக்கிறார். பத்திரிகைகளில் வரும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்கிறார் எனப் பல்வேறு விஷயங்களில் முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் நல்ல பேர் எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல அதிகார பலம், பண பலமும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பெரியளவில் கை கொடுத்திருக்கிறது என்கிறார்கள். முன்னைய இரண்டு பிரதான தேர்தல்களையும் எதிர்க் கட்சியாக இருந்தே  திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்தது.

  சீமான்,கமல், தினகரன், விஜய்காந்த்  ஆகியோரின் கட்சிகளும் செல்வாக்குள்ள சுயேச்சைகளும் வெற்றிபெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளைப் பிரித்திருக்கிறார்.

 இந்த தேர்தலில் எதிர்பார்த்தவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் எதிர்பாராதவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. முன்னணி கட்சி சின்னத்தில் நின்று போட்டியிட்டு தோல்வியையும் கண்டுள்ளனர். யாருக்குமே பரீட்சயம் ஆகாத சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சுயேச்சையும் இருக்கிறார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆவது வார்டில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒரு வாக்குக் கூட வாங்கவில்லை. 21 வயது இளம்பெண் சாருலதா ஒரு  வாக்கால்வெற்றி பெற்றார்.   கோவை மாவட்டத்தில் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளரும், சுயேச்சையும் தலா ஒரு வாக்கை  மட்டும் பெற்றனர்.தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் 2 வாக்குகளை பெற்றார்.

90 வயது மூதாட்டி பெருமாத்தாளை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் கட்டுப்பண‌த்தை இழந்தனர்.ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 ஊரக உள்ளாட்சி தேர்தலில், இருவர் மட்டுமே வெற்றி பெற்று மக்கள் நீதி மய்யத்தின் மானத்தை காப்பாற்றி உள்ளனர். 


விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர் 110 பேர் வெற்றி பெற்றதாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

No comments: