Tuesday, October 26, 2021

சர்ச்சைக்குள்ளான பீஜிங் 2022 ஒலிம்பிக் பாடல்


 சீனாவின் த‌லைநகர் பீஜிங்கில் அடுத்த  ஆண்டு நடைபெற உள்ள  குளிர்கால ஒலிம்பிக், பாராலிம்பிக்   விளையாட்டுகளுக்கான  பாடல்களை பீஜிங் ஏற்பாட்டுக் குழு கடந்த திங்களன்று வெளியிட்டது. அதில் ஒரு பாடல் திரைப்படத்தில் வெளியான இசையை பிரதிபண்ணி இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 அதிகாரப்பூர்வ பாடல்களில்  ஒன்றான  You Are The  Miracle எனும் பாடல்     டிஸ்னியின் பிளாக்பஸ்டர் படமான ஃப்ரோஸனின் கருப்பொருளான லெட் இட் கோவுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாகக் கூறி  கடும் கண்டனங்களுடன் விமர்சனங்கள்  முன் வைக்கப்பட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய பாடலின் யூரியூப் வீடியோவின் கீழ் சீன மொழிகளில்  எதிர்மறையான கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன.

"உனக்கு வெட்கமே இல்லையா?" , "திருட்டை நிறுத்த முடியுமா?" , "நீங்கள் சீனாவை அவமானப்படுத்திவிட்டீர்கள்","திருட்டு மிகவும் வெளிப்படையானது", “இது ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வு. அவர்களால் சொந்தமாக இசையமைக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு வெளிநாட்டு தயாரிப்பாளரையாவது வைத்து இசையமைக்க முடியும்  , "[சீனா] இத்தகைய அப்பட்டமான திருட்டுப் பிரச்சனையைக் கொண்டுள்ளது, ஆனாலும் அவர்கள் இன்னும் ஒலிம்பிக்கை நடத்த விரும்புகிறார்கள்" போன்ற கடிமனையான விமர்சனங்கள்  முன்வைப்பப்பட்டுள்ளன.

ஒரு பதிவர் இரு பாடல்களையும் இணைத்து நிரூபிக்கும் முயற்சியில் மேஷ்-அப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

பீஜிங் 2022  ஒலிம்பிக்குக்காக  10 பாடல்கள் மற்றும் 20 பாடல் வரிகள் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் நிகழ்வுகளின் மூலம் வெளியிடப்பட்டன."ஒலிம்பிக் ஆற்றலைப் பாடல்கள் மூலம் கடத்துதல்" என்ற கருப்பொருளில் பாடல்கள் அமைந்துள்ளன.

  2019 இல் சமர்ப்பிக்கப்பட்ட 1,137 படைப்புகளிலிருந்து வெற்றி பெற்ற படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அசல் பாடல்கள் மற்றும் எழுதப்படாத பாடல் வரிகள் பீஜிங் 2022 தொடர்பான விளம்பர மற்றும் தன்னார்வத் திட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும். 

No comments: