Sunday, October 17, 2021

ஐபிஎல்21 சாதனைகள்

சென்னையின் 4 ஆவது கிண்ணம்

ஐபிஎல்    இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின்     4‍ ஆவது முறையாக சாம்பியனானது.

                                 கொல்கத்தாவின் தோல்வி

  2014 ஆம் ஆண்டு ஐபிஎல் சம்பியனானகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப் போட்டியில் விளையாடிதோல்வி அடைந்துள்ளது.

                            ஒரேஞ்ச் தொப்பி

ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்து ஒரேஞ்ச் தொப்பியை சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் வென்றார். 16 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் 635 ஓட்டங்கள் சேர்த்தார். ஒரு சதம், 4 அரைசதம் 23சிக்ஸர்களும், 64 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.   சென்னையின் ஆரம்பத் துடுப்பாட்ட   ஒரேஞ்ச் தொப்பிக்கான கெய்க் வாட்டுடன் போட்டியிட்ட  சென்னை வீரரான டுபிளஸிஸ் 633 ஓட்டங்கள் அடித்தார்.

                                பேப்பிள் தொப்பி


அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு வீரர் ஹர்சல் படேல் பேப்பிள்  தொப்பியை வென்றுள்ளார்.  ஹர்சல் படேல் 15 போட்டிகளில்  விலையாடி32 விக்கெட்டுகளை  வீழ்த்தியுள்ளார். ஹர்சல் படேல் ஒருமுறை 5 விக்கெட்டுகளையும், ஒருமுறை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.சென்னை வீரர் பிராவோ கடந்த 2012ம் ஆண்டு 32 விக்கெட்டுகளை ஒரே சீசனில் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது, அந்த சாதனையை ஹர்சல் படேல் சமன் செய்துள்ளார். பிளே ஓவ் போட்டியில் பெங்களூரு தோல்வியடைந்ததால்  பிராவோவின் சாதனையை முறியடிக முடியவில்லை.

வளர்ந்து வரும் வீரர்

வளர்ந்துவரும் வீரருக்கான விருதை  சென்னை வீரர் கெய்க்வாட் பெற்றார். கேம்சேஞ்சர் ஆஃப் தி சீசன் விருது, அதிக மதிப்பு மிக்க வீரருக்கான விருது, ஒரேஞ்ச் தொப்பி ஆகிய 3 விருதுகளும் கெய்க்வாட்டுக்கு கிடைத்தன.

நேர்மையான அணி

ஐபிஎல் தொடர்ல்  மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதற்கான விருது(ஃபேர் ப்ளே அவார்ட்) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பிடியெடுப்பு

இந்த விருது  பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ரவி பிஸ்னாய்க்கு வழங்கப்பட்டது. அஹமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் அடித்த ஷாட்டை மிட்விக்கெட்டில் தாவி பிடித்தமைக்காக பிஸ்னாய்க்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது

    டெல்லி பிடல்ஸ் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயருக்கு சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது வழங்கப்பட்டது. ஹெட்மயர் தனது ஸ்ட்ரைக்ரேட்டாக 168 வைத்திருந்தார்.

அதிக சிக்ஸர் 

இந்த சீசனில் அதிகமான சிக்ஸர் அடித்த வீரராக பஞ்சாப் கிங்ஸ் ப்டன் கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராகுல், 30 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

                             அதிக  பவுண்டரி


இந்த சீசனில் அதிகமான பவுண்டரிகளை சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அடித்தார். கெய்க்வாட் மொத்தம் 64 பவுண்டரிகளும், டெல்லி கப்பிடல்ஸ் வீரர் தவண் 63 பவுண்டரிகளும் அடித்தனர்.

அதிக அரைச் சதம்

இந்த ஐபிஎல் தொடரில்  அதிகமான அரைசதம் அடித்த வீரர்களில் சென்னை தொடக்க ஆட்டக்காரர் டூப்பிளசிஸ் முதலிடத்தில் உள்ளார். டூப்பிளசிஸ் 16 போட்டிகளில் 6 அரைசதங்களை அடித்துள்ளார்.

சதம் அடித்தவர்கள்

இந்த ஐபிஎல்  தொடரில்  சென்னையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட், பெங்கள்ரூருவின  தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், ராஜஸ்தான் ரோயல்ஸ் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ரோயல்ஸ் ப்டன் சஞ்சு சாம்ஸன் ஆகியோர் தலா  ஒரு சதம் அடித்தனர்.

No comments: