Saturday, October 2, 2021

கடைசி ஓவரில் வென்றது பஞ்சாப்

கொல்கத்தா அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில்     5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுவெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 45-வது லீக் போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் துபாய் மைதானத்தில்   மோதின. இந்த போட்டியில்நாண‌யச் சுழற்சியில்  வென்ற பஞ்சாப் அணியின் க‌ப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி   20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.

 கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். சுப்மன் கில் 7  ஓட்டங்களில்   வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி உடன் வெங்கடேஷ் இணைந்தார். பெரிது எதிர்பார்க்கப்பட்ட சுப்மன்கில் ஆட்டமிழந்ததை மறக்கும் படி வெங்கடேஷ்ன் விளையாட்டு இருந்தது. அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 67 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். திரிபாதி 34 ஓட்டங்களிலும், க‌ப்டன் இயான் மோர்கன் 2  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

கொல்கட்டாவின் ஓட்ட எண்ணிக்கைஅயை அதிரடியாக உயர்த்திய    ரானா 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுண்டரி எல்லையில் பிடிகொடுத்து வெ


ளியேறினார்.ரானாவின் ஆட்டமிழப்பு  கொல்கட்டாவுக்கு இழப்பாகும்.

கொல்கத்தா அணி   20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான அடிதளத்தை அமைத்தனர். பஞ்சாப் 70 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மயங்க் அகர்வால் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நிக்லோஷ் பூரான், எய்டன் மக்ரம், தீபக் ஹோடா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். ஆனால் ப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். பஞ்சாப் இலக்கை விரட்ட கொல்கத்தா ஓட்டகுவிப்பை கட்டுபடுத்த என போட்டி பரபரப்பாகவே அமைந்தது.


கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ப்டன் கே.எல்.ராகுல் பவுண்டரி எல்லையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்பஞ்சாப்புக்காக அறிஉகமான தமிழக வீரர்     ஷாருக் கான் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஷாருக்கான் 9 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

No comments: