ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் கப்டன் தோனி சிக்சர் அடித்து கைகொடுக்க சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை முதல் அணியாக அணி 'பிளே ஓப்' சுற்றுக்குள் நுழைந்தது. கடந்த சீசனில் 'பிளே ஓப்' சுற்றுக்குச் செல்லாத முதல் அணியாக வெளியேறியது சென்னை. மிக நீண்ட நாட்கலின் பின்னர் டோனி சிக்ஸார் அடித்து வெற்ரியைப் பெற்றுக்கொடுத்ததால் ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதின. சென்னை அணியில் சாம் கர்ரான் நீக்கப்பட்டு டுவைன் பிராவோ இடம் பிடித்தார். ஹைதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நானயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி கப்டன் டோனி, 'கலத் தடுப்பைத் தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய
ஹைஐதராபாத்
அணி
20 ஓவர்களில்
7 விக்கெட்களை
இழந்து
134 ஓட்டங்கள்
எடுத்தது.
ஹைதராபாத் அணிக்கு
ஜேசன்
ராய்,
விரிதிமன்
சகா
ஜோடி
சுமாரான
துவக்கம்
தந்தது. முதல் விக்கெட்டுக்கு 23
ஓட்டங்கள்
சேர்த்த
போது
ஹேசல்வுட்
'வேகத்தில்'
ராய்
(2) வெளியேறினார்.
கப்டன்
கேன்
வில்லியம்சன்
(11), டுவைன்
பிராவோ
பந்தில்
ஆட்டமிழந்தார்.
பிராவோ பந்தில்
பிரியம்
கார்க்
(7) சரணடைந்தார்.
விக்கெட்
ஒருபுறம்
சரிந்தாலும்
மறுனையில்
பொறுப்பான
ஆட்டத்தை
வெளிப்படுத்தினார்
சகா.
இவர்,
46 பந்தில்
44 ஓட்டங்கள்
(2 சிக்சர்,
ஒரு
பவுண்டரி)
எடுத்திருந்த
போது
ரவிந்திர
ஜடேஜா
'சுழலில்'
சிக்கினார்.
அபிஷேக் சர்மா, அப்துல் சமத் ஜோடி நிதானமாக விளையாடியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 35 ஓட்டங்கள் சேர்த்த போது ஹேசல்வுட் 'வேகத்தில்' அபிஷேக் (18), சமத் (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷர்துல் தாகூர் பந்தில் ஜேசன் ஹோல்டர் (5) ஆட்டமிழந்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்தது. ரஷித் (17), புவனேஷ்வர் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை சார்பில் ஹேசல்வுட் 3, பிராவோ 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
சென்னை அணிக்கு
ருதுராஜ்
கெய்க்வாட்,
டுபிளசி
ஜோடி
நல்ல
துவக்கம்
தந்தது.
புவனேஷ்வர்,ஹோல்டர்,ரஷித்
கான்
ஆகியோரின்
பந்துகள
இருவரும்
துவம்சம்
செய்தனர்.முதல்
விக்கெட்டுக்கு
75 ஓட்டங்கள் சேர்த்த போது
ஹோல்டர்
பந்தில்
ருதுராஜ்
(45) ஆட்டமிழந்தார்.
மொயீன்
அலி
(17) நிலைக்கவில்லை.
ஹோல்டர்
வீசிய
16வது
ஓவரில்
ரெய்னா
(2), டுபிளசி
(41) ஆகிய
இருவரும்
ஆட்டமிழந்தனர்.
சென்னையின்
பக்கம்
இருந்த வெற்றி வாய்ப்பு ஹைதராபாத்
பக்கம்
சாய்ந்தது.
மொயின் அலி,
சுரேஷ்
ரெய்னா
இருவரும் அடுத்தடுத்து ஆட்டம்
இழந்ததால்
ஆட்டத்தின்
கடைசி
கட்டத்தில்
விறுவிறுப்பு
அதிகரித்துக்கொண்டே
சென்றது.
17வது
ஓவர்
முடிவில்,
18 பந்துகளில்
22 ஓட்டங்கள்
அடிக்க
வேண்டிய
நிலை
இருந்தது.
அம்பத்தி
ராயுடுவுடன் கப்டன் மகேந்திர
சிங்
டோனி
களத்துக்கு
வந்திருந்தார்.
கடந்த
சில
சீசன்களில்
டோனியின்
பழைய
ஆட்ட
திறனுடன்
இல்லை
என்பது
அனைவருக்கும்
தெரிந்த
விஷயம்தான்.
நடப்பு
ஐபிஎல்
சீசனில்
டோனி
மிக
மிகக்
குறைவாகத்தான்
ஓட்டங்களை
எடுத்தார்.
10 போட்டிகளில்
50க்கும்
மேற்பட்ட
ஓட்டங்களை
மட்டும் அவர் எடுத்திருந்தார். அதனால்,
அனைவரின்
கவனமும்
ராயுடுவின்
மேல்
இருந்தது.
இதையெல்லாம் மனதில் வைத்து தானோ என்னவோ தெரியவில்லை, சித்தார்த் கவுல் வீசிய 18வது ஓவரில் அதிக பீஃல்டர்களை முதல் ரிங்கிற்கு உள்ளே வைத்தார் கப்டன் வில்லியம்சன். அவரும் மிதமான வேகத்தில் சரியான அளவில் பந்தை வீசினார். இதனால் டோனியால் ஓட்டம் எடுக்க முடியவில்லை. 2வது பந்து, 3வது பந்துகள் டாட் ஆகின. 4வது பந்தை தட்டி விட்டு ஓட முயன்றபோது ஜேசன் ராய் கைகளில் பட்டு மிஸ் கேட்ச் ஆனது. அதில் ஒரு ஓட்டம் கிடைத்தது.
டோனி ஒரு ஓட்டம் ஓடி
மறுமுனையில்
இருக்கும்
அம்பத்தி
ராயுடு
வுக்கு
துடுப்பாடும் வாய்ப்பு வழங்குவது
திட்டமாக
இருந்தது.
இதை
ஹைதராபாத்
அணி
கப்டனும்
சரியாகப்
புரிந்துகொண்டு ஓட விடாமல் உள்ளே
பீஃல்டர்களை
நிறுத்தினார்.
டோனியை
ஓட
விடாமல்
தடுத்து
அம்பத்தி
ராயுடுவை
இந்த
பக்கம்
வர
விடாமல்
பார்ப்பது
மட்டுமே
கப்டனாக
வில்லியம்சன்
மனதில்
ஓடியுள்ளது.
அதே சித்தார்த்
கவுல்தான்
20வது
ஓவரை
வீசுவதற்கு
வந்தார்.
கடைசி
ஓவரில்
மூன்று
ஓட்டங்கள்
தேவை
என்ற
பரபரப்பான
நிலைமை
அப்போது
இருந்தது.
சித்தார்த்
வீசிய
முதல்
பந்தை
அம்பத்தி
ராயுடு
எதிர்கொண்டார்.
அதில்
ஓட்டம்
இல்லை.
இரண்டாவது
பந்தை
ஆப்
சைட்
அடித்தார்
ராயுடு.
ஒரு
ஓட்டம் கிடைத்தது. இதனால்
4 பந்துகளில்
2 ஓட்டங்கள்
அடிக்க
வேண்டிய
நிலைமை
சிஎஸ்கே
அணிக்கு
ஏற்பட்டது.
மூன்றாவது பந்தை டோனி சந்தித்தார். ஆனால் மிட் விக்கெட் திசையில் அவர் அடித்த பந்து சென்று ஓட முடியாமல் போனது. டோனி இப்படியே பந்துகளை சந்தித்து ஓட்டம் அடிக்க முடியாமல் சிஎஸ்கே அணி தோற்கும்
என்று ஹைதராபாத்
அணி
வீரர்கள்
உற்சாகமாக
இருந்தனர்.
ஆனால்
ஓவர்
தி
விகெட்
ஓடி
வந்து
பந்து
போட்டு
வந்த
சித்தார்த்
கவுல்,
ரவுண்ட்
தி
விக்கெட்டாக
ஓடி
வந்து
டோனியின் கால்களுக்கு அருகே..
கிட்டத்தட்ட
யார்க்கர்
மாதிரி
ஒரு
பந்தை
வீசினார்.
அவ்வளவுதான்
டோனியின்
மட்டையிலிருந்து
விருட்டென்று
புறப்பட்டது
அந்த
இமாலய
சிக்சர்.
லாங்
ஆன்
திசையில்
பறந்த
அந்த
பந்து
கூட்டத்துக்கு
நடுவே
சென்று
விழுந்தது.
மொத்த
மைதானமும்
ஆர்ப்பரித்தது.
அத்தனை
பேரும்
எழுந்து
நின்று
உற்சாகத்தில்
துள்ளி
குதித்து
ஆடினர்.
தொலைக்காட்சியில்
பார்த்துக்
கொண்டிருந்த
ரசிகர்களும்
ஆர்ப்பரித்தனர்.
எந்த பந்துவீச்சாளரின் ஓவரில் ஃபீல்டர்களை உள்ளே வைத்து ஓட முடியாமல் தடுக்கப்பட்டாரோ, அதே பந்துவீச்சாளரின் ஓவரில் தனது பழைய பாணியிலான இமாலய சிக்சரை பறக்க விட்டு பதிலடி கொடுத்தார் டோனிஎன்று ரசிகர்கள் ஆரவாரமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிந்தனர். டோனி அடித்த அந்த ஒற்றை சிக்ஸர், அணியின் துவக்க வீரர்கள் கெய்வார்ட், டுப்ளசிஸ் ஆகியோரின் ஆட்டத்தை கூட ஒரு நிமிடத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மறக்கடித்து விட்டது. அந்த அளவுக்கு கண் கொள்ளாகாட்சியாக இருந்தது அந்த ஷாட். இதுதான் தோனி.. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. எதிரணிகளே நாங்கள் வந்து விட்டோம்.. உங்கள் வாலை சுருட்டி கொள்ளுங்கள்.. தி கிங் இஸ் பேக்.. என்று ஆரவாரிக்கிறார்கள் சென்னை சூப்பர் சிங்கங்கள்.
சென்னை அணி 11 போட்டியில், 9 வெற்றி, 2 தோல்வி என, 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கான இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. தவிர ஐ.பி.எல்., அரங்கில் 11வது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. கடந்த சீசனில் (2020) மட்டும் லீக் சுற்றோடு திரும்பியது
No comments:
Post a Comment