Wednesday, October 6, 2021

கமரா லென்ஸை உடைத்த ரானா


 கொல்க‌த்டா அணியின் நட்சத்திர வீரரானா ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் இருந்த கமரா லென்ஸை உடைத்த  வீடியோ வைரலாகிறது.

14-வது ஐபிஎல் தொடரின்   49-வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. சன்ரைசர்ஸ்  அனியின் வெற்றிக்கை நோக்கி கொல்கத்தா துடுப்பெடுத்தாடியபோது  கொல்கத்தா அணி வெங்கடேச ஐயர், த்ரிப்பாதி  ஆகியோர் ஆட்டமிழந்ததால்  ரானா, நிதானமாக விளையாடினார்.

  இந்த போட்டியின் போது 17வது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டரின் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்றனர். லெக் சைடில் பந்தினை தூக்கி அடித்தார். அப்போது அந்தப் பந்து நேராக சென்று பவுண்டரி லைனில் இருந்த க‌மரா லென்ஸ்ஸின் மீது பட்டது. பந்து பட்ட வேகத்தில் க‌மரா லென்ஸ் நொறுங்கியது. அதனை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ரஷீத் கான் பார்த்து க‌மராவின் உடைந்த லென்ஸ் முன்பு கைகாட்டி கிண்டல் செய்தார். இந்த‌ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments: