சீனாவில் நடைபெற உள்ள பீஜிங் 2022 குளிர்கால விளையாட்டுக்கான ஒலிம்பிக் சுடர் கடந்த திங்கள்கிழமை கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில்
விளையாட்டுப் பிறந்த இடத்தில் ஏற்றப்பட்டது.
பாரம்பரிய விழாவின் போது, பண்டைய கிரேக்க
புராணங்களில் 2,500 ஆண்டுகள் பழமையான ஹேரா கோவிலுக்கு முன்,நடிகை சாந்தி ஜார்ஜியோ சூரிய
கதிர்களை மையப்படுத்தி, ஒரு குழிவான கண்ணாடி மூலம் ஜோதியை ஏற்றி வைத்தார்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முதல் விளையாட்டுகளை நடத்திய அரங்கத்தின் உள்ளே
முதல் ஜோதி, கிரேக்க சறுக்கு வீரர் ஐயோனிஸ் அன்டோனியூவிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாவது ஜோதி முன்னாள் சீன
ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் தடகள வீரர் லி ஜியாஜூனிடம் ஒப்படைக்கப்பட்டது.
"கோவிட் -19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட
சூழ்நிலை காரணமாக, ஜோதி ஏற்றும் விழா உள்ளூர் சுகாதார நெறிமுறைகளுடன் கண்டிப்பாக இணக்கமாக
நடத்தப்படும்" என்று ஹெலெனிக் ஒலிம்பிக் கமிட்டி செப்டம்பரில் அறிவித்தது.
XXIV குளிர்கால ஒலிம்பிக் 2022 பிப்ரவரி 4 முதல் 20, 2022 வரை நடைபெறும்.
No comments:
Post a Comment