சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கப்டனான டேவிட் வார்னர் ரசிகர்களுடன் ஐபிஎல் போட்டியைப் பார்த்த வீடியோவைரலாகி வருகிறது. ஹைதராபத் அணியை உச்சத்தில் தூக்கிவைத்த டேவிட் வானரை நிர்வாகம் உதாசீனம் செய்வதால் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் வானரின் மோசமான ஆட்டத்தால் ஹைதராபாத் சில போட்டிகளில் அந்த அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.
அதனையடுத்து அவர் கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து முதல்பாதியில்
சில வானர் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. நட்சத்திர வீரர் பெஞ்சில்
அமர் வைக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு எமிரேட்சில்
நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் முதலில் சில வாய்ப்புகள் அவருக்கு
கொடுக்கப்பட்ட போதும் அவர் சிறப்பாக விளையாடாததால் மீண்டும் அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக ஒரு சில போட்டிகளை அவர் மைதானத்திற்கு வராமல் ஹோட்டலில் கண்டுகளித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற
போட்டியின்போது போட்டியை மைதானத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி
வருகிறது. வீரர்களின் இடத்தில் அமராமல் ரசிகர்கள் அமரும் கலரியில் அமர்ந்து போட்டியை
கண்டு களித்தது தற்போது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2016ஆம் ஆண்டு ஐபிஎல் சம்பியனான கப்டனுக்கு இப்படி
ஒரு நிலையா என ரசிகர்கள் வினவுகிறார்கள்.அடுத்த ஏலத்தில் வானரை ஹைதராபாத் வானரை எடுக்காது.
ஆனால், அவர் அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி மன்னன் கிறிஸ் கைல்ஸ் மேற்கு இந்தியத்தீவுகள் அணியை மேம்படுத்துவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார். ஆனால், எதிர் பார்த்ததுபோல் அவர் விளையாடாததால் தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. அதனால்தான் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது.
No comments:
Post a Comment