Wednesday, October 13, 2021

கட்டார் உலகக்கிண்ணத்தில் விளையாட முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றது.


 உலகக்கிண்ண உதைபந்தாட்ட ஐரோப்பிய தகுதிச் சுற்றில் விளையாடும் ஜேர்மனி முதல் அணியாக கட்டாரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது.ரஷ்யா, குரோஷியா ஆகியவை தங்கள் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதை உறுதிசெய்துள்ளன. ஜெர்மனி ஐரோப்பிய தகுதிச் சுற்று மூலம் ஃபிஃபா உலகக் கிண்ண  போட்டிக்கு முதல் அணியாக சென்றது.

திங்களன்று  நடைபெற்ற வட மாசிடோனியாவுக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற  கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது.

 இந்த ஆண்டு தொடக்கத்தில் மாசிடோனிவிடம்  2-1        என்ற கோல் கணக்கில் ஜேர்மனி தோல்வியடைந்தது. எட்டு தகுதிப் போட்டிகளில் ஜேர்மனி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், குழு J இல்  ஜேர்மனி முதலிடத்தில் உள்ளது. ஜேர்மனி 20 கோல்கள் அடித்துள்ளது, எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன.

ஜேர்மனியின் இளம் வீரர் ஜமால் முசியலா,[ 18 வயது, 227 நாட்கள்], சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தந்து முதல்கோலை அடித்தார். 

  1910 ஆண்டு  சுவிச்ஸ‌ர்லாந்துக்கு எதிராக 17 வயதான ஜேர்மனிய இளம் வீரர்  மரியஸ் ஹில்லர்  கோல் அடித்தார்.

"இந்த சீசனில் நாங்கள் இப்போது ஐந்து வெற்றி பெற்றுள்ளோம்" என்று ஜெர்மனி பயிற்சியாளர் ஹன்சி ஃப்ளிக்   கூறினார்.

No comments: