Thursday, October 28, 2021

நீச்சல் போட்டியில் பதக்கங்களை அள்ளிய நடிகரின் மகன்


 நடிகர் ஆர். மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் பெங்களூரில் பசவனகுடி நீர்வாழ் மையத்தில் சமீபத்தில் முடிவடைந்த 47வது தேசிய ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் 2021 போட்டியில்  ஏழு பதக்கங்களை வென்றார்.

  800 மீற்ற‌ர் ஃப்ரீஸ்டைல் நீச்சல், 1500 ஃப்ரீஸ்டைல் நீச்சல், 4x100 ஃப்ரீஸ்டைல் ரிலே, 4x200 ஃப்ரீஸ்டைல் ரிலே ஆகியவற்றில்வேதாந்த் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 100 மீற்ற‌ர் ஃப்ரீஸ்டைல் நீச்சல், 200 மீற்ற‌ர் ஃப்ரீஸ்டைல் நீச்சல், 400 மீற்ற‌ர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் ஆகியவற்றில் வெண்கலம் வென்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் கலந்து கொண்டார் வேதாந்த் .மொத்தம், நான்கு வெள்ளி, மூன்று வெண்கலம் ஆகியவற்றை  வென்றார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், லாட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன் போட்டியில் வேதாந்த் வெண்கலம் வென்றார்.

போட்டியை நடத்தும் கர்நாடகா 160 பதக்கங்களுடன் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 69 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

No comments: