Wednesday, October 27, 2021

அவுஸ்திரேலிய ஓப்பன் பயிற்சிப்போட்டி இரத்து


 ரென்னிஸ் உலகின் கிராண்ட்ஸாலம் போட்டிகளில் ஒன்றான  அவுஸ்திரேலிய  ஓப்பன் பயிற்சிப்போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக  இரத்துச் செய்யப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

கிராண்ட்ஸ்லாம்   தொடங்குவதற்கு முந்தைய வாரங்களில் வழக்கமாக விளையாடப்படும் பயிற்சிப் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரண்டாவது ஆண்டாக இரத்துச் செய்யப்படுகிரது. ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது ஆண்டாகும்.

மெல்போனில் நடைபெறும் அவுஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் கலந்துகொள்லும் வீரர்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டுமா என்பது குறித்த விளக்கத்திற்காக இன்னும் காத்திருக்கின்றனர்.

இரண்டு கொரோனா  தடுப்பு ஊசி போடாதவர்கள் அவுஸ்திரேலிய ஓப்பனில் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்படும் பட்சத்தில் நடப்பு சம்பியன்  நோவக் ஜோகோவிச் உட்பட பல வீரர்கள் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும்.

  தடுப்பூசி போடாத வீரர்கள்  வீரர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் முடிந்திருந்தால் பங்கேற்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இரண்டு ஊசி போட்டவர்கள்  முழுமையான   சுதந்திரத்தை  அனுபவிப்பார்கள்.

நிலமான விக்டோரியாவில்  அனைத்து வீரர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக மாநில முதல்வர் டான் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். 

"அவுஸ்திரேலியன் ஓப்பனில் டென்னிஸைப் பார்க்கும் அனைத்து மக்களும்,   இரட்டை வேக்ஸாக இருக்கப் போகிறார்கள், அங்கு பணிபுரியும் அனைத்து மக்களும் டபுள் வாக்ஸ்ஸாக இருக்கப் போகிறார்கள்," என்று டான் ஆண்ட்ரூஸ் பொது வானொலியில் கூறினார்.

No comments: