Wednesday, October 6, 2021

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் கொரோனா அழுத்தம்


 சீன தலை நகர் பீஜிங்கில் 2022 ஆம் ஆன்டு பெப்ரவரி 4 ஆம் திகதி முதல்  20 ஆம் திகதி வரை நடைபெற உள்ள பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் போது கொரோனா பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று விளையாட்டு அமைப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால்   தொடர்ச்சியான சோதனைகளுக்கு சீனா தயாராகி வருகிறது.

தடகள வீரர்கள் உட்பட, தடுப்பூசி போடப்படாதவர்கள்  சீன தலைநகருக்கு வந்தவுடன் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பங்கேற்பாளர்கள், ஊடகம் மற்றும் இட பணியாளர்கள் உட்பட, 21 நாள் தனிமைப்படுத்தல் இல்லாமல் "மூடிய வளைய மேலாண்மை" குமிழிக்குள் நுழைய முடியும். விளையாட்டுகளின் காலத்திற்கு அவர்கள் குமிழியை விட்டு வெளியேற முடியாது.

ப‌ல்வேறு போட்டிகளில் பங்கேற்க 2,000 வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள், குழு அதிகாரிகள், சர்வதேச தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் நேரம் மற்றும் மதிப்பெண் வல்லுநர்கள்  போன்றவர்கள் சீனாவுக்கு வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் இட மேலாண்மைத் தலைவர் யாவ் ஹுய் தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போலல்லாமல், பீஜிங் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

No comments: