ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் அர்ஷ்தீப் சிங். இன்று பஞ்சாப் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இந்திய அணியில் அவர் இணைய வேண்டும் என ஷேவாக் விரும்புகிறார்.
22 வயதே ஆன அர்ஷ்தீப் தான்,
தற்போதைய நிலவரப்படி பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். அர்ஷ்தீப்
பந்து வீசினால் ஒரு விக்கெட் நிச்சயம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அர்ஷ்தீப்பின் பேஸ், ஸ்விங், யார்க்கர் என்று ஓவருக்கு 6 பந்துகளையும்
ஆறு வகையாக வீசுவார்.
கடைசி நேரத்தில், குறிப்பாக டெத் ஓவர்களில் அவரது
பந்துவீச்சில், பிர்பல வீரர்கள் திணறுவது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அர்ஷ்தீப் சிங்கின் பந்து வீச்சுபற்றி ஷேவாக் சிலாகித்து பேசியுள்ளார். "அவர் [அர்ஷ்தீப்] சகீர் கானிடம் மூன்று நாட்கள் பயிற்சி மேற்கொண்டார். அவர் இந்திய அணியில் சிறிது நேரம் செலவிட்டால், அவரால் எவ்வளவு திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
, பிசிசிஐ அவரை கவனித்து அவருடைய திறமை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அர்ஷ்தீப் மிகச்சிறந்த பந்து வீச்சாளர், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, இதுபோன்று செயல்பட்டால், அவர் நிச்சயம் ஒருநாள் இந்திய அணியில் தேர்வாவது உறுதி" என்று ஷேவாக் கூறியுள்ளார்.அர்ஷ்தீப் மிகக் குறுகிய காலத்தில் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். அவர் 2019ம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் விளையாட, பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் தனது 20 வயதில் தான் அறிமுகமானார். ஜூன் 2021 இல், இலங்கைக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, ஐந்து நெட் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இப்போது, அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். உண்மையில் 2 வருடத்தில் இது அசுரத்தனமான வளர்ச்சி என்றே கூற வேண்டும்
No comments:
Post a Comment