Thursday, October 21, 2021

இரட்டை உலகக் கிண்ண‌ சம்பியனாகுமா இங்கிலாந்து?

ஒரு நாள் கிறிக்கெற்  உலகக்கிண்ண சம்பியனான இங்கிலாந்து 20 ஓவர் போட்டியிலும் சம்பியனாகுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறது.

2019 உலகக் கிண்ணப் போட்டியில் ச‌ர்ச்சைக்குரிய முறையில் சம்பியனான இங்கிலாந்து ரி20  உலகக் கிண்ணத்தையும்  மிகமிகக் கடினம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மந்தமனா பிட்ச்கள் இங்கிலாந்தின் துடுப்பாட்டத்துக்கும், பந்து வீச்சுக்கும் உதவாது.

 இங்கிலாந்தின் நட்சத்திர  வீரர்களான‌  ஜோப்ரா ஆர்ச்சர்  , சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் இல்லாதது பின்னடைவு. மோர்கனின் துடுப்பாட்டம் சந்தேகமாக உள்ளது. அவர் அணியில்   அணியில் இருக்கத் தகுந்தவர்தானா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தின் ரி20 புள்ளி விவரங்கள் அணிக்குத்தான் வெற்றி சாதகமாக இருப்பது போல் தெரியும். ஏனெனில் கடந்த 11 இருதரப்பு சர்வதேச ரி20 போட்டிகளில் இங்கிலாந்து 9-ல் வென்று ஒன்றில்தான் தோற்றுள்ளது, பயிற்சிப்[ போட்டியில் இந்தியாவிடம் தோற்றது. இதில் 6 போட்டிகளில் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக 5-ல் வென்றது. ஆனால் இந்தியாவிடம் 3-2 என்று தோற்றது.

2016 ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்டோக்சை அந்த பைனல் ஓவரில் பிராத்வெய்ட் வெளுத்து வாங்கியதை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் மேலும் அந்த இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் கூட இருந்தனர். நல்ல பினிஷரான ஜோஸ் பட்லர்     பெரிய அதிரடி ஓப்பனராகி விட்டார். டேவிட் மலான் பிரமாதமான ரி20 வீரராக நம்பர் 1 ரேங்கிங்கில் உள்ளார். ஆனால் ஸ்லோ பிட்ச்களில் இவர் சோபிப்பது சந்தேகம்.


லியாம் லிவிங்ஸ்டன் ஒரு அபாய வீரர், பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலியை தன் லாலி பாப் லெக் ஸ்பின்னிலேயே வீழ்த்தினார், ஆனால் ஸ்லோ பிட்சில் பேட்டிங்கில் அவ்வளவாக ஐபிஎல் தொடரில் சோபிக்கவில்லை. மோர்கன்   இப்போதைக்கு மீள முடியாதிருக்கிறார். ஐக்கிய அரபின் பிட்ச்கள் அவருக்கு உண்மையில் ஒரு பேய்தான், ஆகவே மீதமிருப்பது ஜானி பேர்ஸ்டோவும், ஐபிஎல்லில் அசத்திய   மொயின் அலியும். ஜேசன் ராய் சன் ரைசர்ஸுக்காக சில முக்கிய அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், ஆனால் இது சர்வதேச கிரிக்கெட் இதில் ஸ்லோ பிட்சில் அவரை மட்டையாக்கினாலும் ஆக்கி விடலாம்.

 பந்து வீச்சாள‌ர் ஆதில் ரஷீத் இருக்கிறார். இவரது லெக் ஸ்பின் எந்த அணிக்கும் அன்றைய தினத்தில் அபாயகரமாகும், அதே போல் மொயின் அலியும் ஐபிஎல்லில்  அனுபவமிக்கவர்.  மார்க் உட் பயனளிப்பார் ஆனால்   வேகம் காட்டினால் பவுண்டரி ,சிக்ஸ் பறக்கும்.  சகல துறை வீரர்களான டேவிட் வில்லே., கிறிஸ் வோக்ஸ் போன்றவர்கள்  திறமை படைத்தவர்கள்.


  இங்கிலாந்தின் சமீபத்திய வெற்றிகள் எல்லாமே  அதிக ஓட்டங்கள் ஃபிளாட் பிட்ச்களில் எடுத்தவை. ஆனால்   பனிப்பொழிவு, பிட்ச் மந்தமாக இருப்பது, அனைத்திற்கும் மேலாக உஷ்ணம், இரவில் அதிகரிக்கும் ஈரப்பதம் உருவாக்கும் கூடுதல் உஷ்ணம். நிச்சயம் பிட்ச் இங்கிலாந்துக்கு ஒரு எதிரி, அதே போல் எதிரணியினரின் ஸ்பின் பந்து வீச்சும்  பெரிய அச்சுறுத்தல்தான்.

பிட்ச் ஸ்லோ என்றால் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிடம் இங்கிலாந்து  தோற்று விடும்.இவை அனைத்தும்  இங்கிலாந்தின் இரட்டை உலகக் கிண்ண‌ கனவை தகர்க்கவே செய்யும் என்று கூற முடியும்.

No comments: