Friday, October 15, 2021

டிஸ்னி பிளஸ் ஹொட்ஸ்டாரில் டோனியின் புதிய சாதனை


 

  ஐபிஎல்லில் டெல்லிக்கு எதிரான போட்டியில் டோனியின்  அட்டகாச விளையாட்டினால் டிஸ்னி பிளஸ் ஹொட்ஸ்டாரில்  புதிய சாதனை பதிவாகியுள்ளது.

18வது ஓவரில் டிஸ்னி பிளஸ் ஹொட்ஸ்டார் ஓடிடி தளத்தில் போட்டியை பார்த்தோர் எண்ணிக்கை 6.4 மில்லியனாக உயர்ந்தது. அதாவது 64 லட்சமாக அதிகரித்தது. கேபிள், டிடிஎச் போன்றவற்றின் மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ச‌னலை பார்த்தவர்கள் கணக்கு அல்ல இது. இணையதளத்தின் வழியாக பார்த்தோர் எண்ணிக்கை இதுவாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே நேரத்தில் இத்தனை பேர் போட்டி பார்த்தது, அதுதான் முதல் முறையாகும். ஆனால், அந்த சாதனை அடுத்த சில நிமிடங்களில் முறியடிக்கப்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி ஆட்டமிழந்தார். 5 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது டோனி, பந்துகளை எதிர்கொண்டார். மொயின் அலி ஆட்டமிழந்ததும், 70 லட்சம் பார்வையாளர்களை எட்டியது டிஸ்னி பிளஸ் ஹொட்ஸ்டார். ஆனால் அதுவே டோனி   கிரீசுக்குள் வந்ததும் 72 லட்சமாக உயர்ந்தது. டோனி   3 பவுண்டரிகளை விளாசி சிஎஸ்கே அணியை வெற்றி பெறச் செய்தார். 72 லட்சம் என்பது நடப்பு தொடரின் உச்சபட்ச வியூவர்ஷிப்பாக பதிவாகியுள்ளது.

 சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் கூட, செல்போனில் இந்த போட்டியைதான் பார்த்துள்ளனர். டோனி வெற்றிக்கான ஓட்டத்தை அடித்ததும் தியேட்டர் முழுக்க டோனி.. டோனி.. என்ற கோஷங்கள் எழுந்தன. இந்த வீடியோக்களும் வெளியாகியிருந்தன. 

No comments: