பங்களாதேஷின் சகலதுறை வீரரான
ஷாகிப் அல் ஹசன் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான
போட்டியில் அதிக விக்கெற்களை வீழ்திய வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில்
ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 89 ரி20
போட்டிகளில் விளையாடிய ஷாகிப் அல் ஹசன் 108 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
84 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 107 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
அதனை ஷாகிப் அல் ஹசன் முறியடித்துள்ளார்.
ரி20யில் யாரும் செய்யாத புதிய
சாதனைக்கும் அவர் சொந்தக்காரனாகி உள்ளார். ரி20 கிறிக்கெற்றில் 108 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி ஆயிரம்
ஓட்டங்களையும் அவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சர்வதேச ரி20 போட்டிகளில் 1763 ஓட்டங்களை சகிப் அல் ஹசன் அடித்துள்ளார்.
ரி20,அபுதாபி,ரி20உலகக்கிண்ணம்,விளையாட்டு,கிறிக்கெற்,பங்களாதேஷ்,ஸ்கொட்லாந்து
No comments:
Post a Comment